
கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் “தி கேர்ள்ஃபிரண்ட்” !
கீதா ஆர்ட்ஸ் துவங்கிய காலத்திலிருந்தே, தனித்துவமான திரைப்படைப்புகளை வழங்கி, தனக்கென தனியொரு பெயரைப்பெற்றிருக்கும் புகழ்மிகு நிறுவனம் ஆகும். வித்தியாசமான கதைக்களத்தில் மீண்டும் மீண்டும் பல வெற்றிப்படைப்புகளை தந்து வரும் கீதா ஆர்ட்ஸ் தற்போது, புதிய பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு அற்புதமான ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

தேசிய அளவிலான இளைஞர்களின் கனவு நாயகி மற்றும் தனித்துவமான நடிகை என புகழ் பெற்றிருக்கும் ராஷ்மிகா மந்தனா முக்கியப் பாத்திரத்தில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அனைத்துப் படங்களிலும் அழுத்தமான நடிப்பை வழங்கி ரசிகர்களை ஈர்த்து வரும் ராஷ்மிகா , தற்போது பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த புதிய படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறார்.
இப்படக்குழு படம் பற்றிய ஒரு அழகான ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளது, இப்படம் அனைத்து வயதினரும் கொண்டாடும் ஒரு அழகான சினிமா அனுபவமாக இருக்கும் என்று ஸ்னீக் பீக் உறுதியளிக்கிறது. இப்படத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் The Girlfriend என தலைப்பிடப்பட்டுள்ளது, தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் தனது ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவை கையாள்கிறார், இசைப் புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார், இவர்கள் இருவரும் நிச்சயமாக படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருப்பார்கள். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்க, வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி இப்படத்தை தயாரிக்கின்றனர்.
நடிகர்கள் & குழுவினர் விவரங்கள்
நடிப்பு – ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர். எழுத்து – இயக்கம் – ராகுல் ரவீந்திரன்
வழங்குபவர் – அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்கள் – வித்யா கோப்பினீடி, தீரஜ் மொகிலினேனி
இசை – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த்
தயாரிப்பு வடிவமைப்பு – S. ராமகிருஷ்ணா & மோனிகா நிகோத்ரே
ஆடைகள் – ஷ்ரவ்யா வர்மா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ