ஜெயிலில் இருந்து பிரகாஷூக்கு செக் வைக்கும் காயத்ரி..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “தெய்வமகள்”.
இதில், முன்னணி கதாபாத்திரங்களில் சத்யாவாக வாணி போஜனும், பிரகாஷாக கிருஷ்ணாவும், மிரட்டலான வில்லியாக அண்ணியார் காயத்ரி கதாபாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பாவும் நடிக்கிறார்கள்.


குடும்பங்களின் பேராதரை பெற்ற இந்த தொடரில், காயத்ரியை ஜெயிலுக்கு அனுப்பும் சத்யா, பிரகாஷை பழிவாங்க ஜெயிலில் இருந்து கொண்டே தொடர்ந்து சூழ்ச்சி செய்து வரும் காயத்ரி, பிரகாஷ் குடும்பத்துக்கு அடுத்தடுத்து செக் வைக்கிறார். குமாரின் இரண்டாவது திருமணத்தை தடுக்க நினைக்கும் காயத்ரி, ராஜூ, வசந்த்தை சூழ்ச்சி வலையில் சிக்க வைக்க, இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தை பிரகாஷ் – சத்யா இணைந்து எப்படி மீட்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
“தெய்வமகள்” நெடுந்தொடரை இரவு 7:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.