
“எனக்கு நடிப்பதற்கு முழு சுதந்திரம் கெளதம் மேனன் சார் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்து மிகவும் சந்தோஷமாக இருந்தது” – ’ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கிருஷ்ணா!
மிகச் சில நடிகர்களே கதையம்சம் சார்ந்த படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதற்காகப் பாராட்டப்படுவார்கள். அவர்களை ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதில் நடிகர் கிருஷ்ணாவும் ஒருவர். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் கிருஷ்ணா. அவர் முதல்முறையாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இயக்குநர் கெளதம் தனது படங்களில் வலுவான வில்லன் கதாபாத்திரங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்றவர். கிருஷ்ணா சந்தேகத்திற்கு இடமின்றி ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை சரியாகத் திரையில் பிரதிபலித்துள்ளார். படம் தொடர்பாக வெளியாகியுள்ள புரோமோ காட்சிகளிலேயே இது தெளிவாகத் தெரிகிறது. படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள தனது அனுபவம் குறித்து கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத் திறமையைப் பாராட்டி, இந்தப் படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றிய தனது ஆர்வத்தை கிருஷ்ணா வெளிப்படுத்தியுள்ளார். கெளதம் மேனன் தனது படத்தில் சிறிய துணை கதாபாத்திரத்தைக் கூட சிறப்பாக வடிவமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்து விடுவார் என்கிறார் கிருஷ்ணா. அப்படி இருக்கும்போது, இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், கிருஷ்ணா ஒரு கணம் கூட தயங்காமல் உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதில் சவாலான ஸ்டண்ட்கள் இருந்தாலும் அதை விரும்பியே ஏற்றுக் கொண்டேன் என்கிறார்.
“படத்தில் நடிப்பதற்கு கெளதம் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்று கிருஷ்ணா சொல்லி இருக்கிறார். ஆக்ஷனுக்கு என வரையறுத்த எல்லைகளைத் தாண்டி வருண் நடித்துள்ளது குறித்து அவர் பாராட்டினார். மேலும், இந்தப் படம் அவரை சிறந்த நடிகராக நிலைநிறுத்தும் எனவும் நம்புவதாகவும் கூறியுள்ளார். ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு பரபரப்பான அனுபவம் தருவதோடு அவர்கள் மகிழும்படியான தருணங்களையும் கொண்டிருக்கும்.
‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருறார்.
தொழில்நுட்ப குழு:
ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி,
எடிட்டிங்: ஆண்டனி,
இசை: கார்த்திக்,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆடைகள்: உத்தாரா மேனன்,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா,
ஆக்ஷன்: யானிக் பென்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே அஸ்வின் குமார்,
கலரிஸ்ட்: ஜி பாலாஜி,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்,
ஒலிக்கலவை: சுரேன் ஜி.