“காந்தி டாக்ஸ்” திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள்: – விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ்
ஹைதாரி, சித்தார்த் ஜாதவ்.மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – கிஷோர் பாண்டுரங் பெலேகர்.
மியூசிக்: ஏ.ஆர். ரஹ்மான்.
ஒளிப்பதிவு:-
கரண்.பி.ராவ்
படத்தொகுப்பு:-
ஆசிஸ் மாத்ரே.
கலை இயக்குனர்:-
துர்கபிரசாத் மஹாபத்ரா
தயாரிப்பாளர்கள்: – ஜீ . ஸ்டுடியோஸ், கியூரியஸ், பின்க்மூன் & மூவிமில் என்டர்டெயின்
மென்ட் – ராஜேஷ் கெஜ்ரிவால், குர்பால் சச்சார், உமேஷ் குமார் பன்சால், மீரா சோப்ரா, கிஷோர் பி பெலேகர்.
மஹாராஷ்டிரா மும்பை குடிசைப் பகுதியில் வாழும்
விஜய் சேதுபதி, வேலை இல்லாததால்
ஒருவேளை உணவுக்காக மிக கஷ்ட்டப்படுகிறார்.
அடுத்த பக்கம் பெரும் பணக்காரரான
அரவிந்த் சாமிக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட தனது சொத்துக்களை
எல்லாம் இழந்துவிடுகிறார். இருவரது இந்த
நிலைக்கு காரணம், மற்றவர்கள்வாங்கிய லஞ்சங்கள்.
தங்கள் நிலையில் இருந்துமீள்வதற்காக இருவரும்மேற்
கொள்ளும்
முயற்சியின் போது, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அதன் பிறகு என்ன நடந்தது?, என்பதை மனிதர்களை விட அவர்களிடம்
இருக்கும் பணம் தான் பேசும், என்ற உண்மையை
பேசுவது தான் ‘காந்தி டாக்ஸ்’.திரைப்பட
கதைக்களம்.
பணம் பத்தும் செய்யும், என்பதை சொல்வது போல், நம் வாழ்க்கையின்
அனைத்து பிரச்சனைகளுக்காக ஒரே ஒரு தீர்வு பணம் மட்டும் தான், அந்த
பணம், எங்கு, எப்படி எல்லாம் கிடைக்கிறது.
பேசுகின்றன, என்பதை படத்தில் விவரிப்பதுடன், பணம் மட்டுமே
போதுமா ? என்பதை கேள்வியை பார்வையாளர்
களிடம்
எழுந்த அதற்கான தீர்வை சொல்லியிருக்
கின்றன.

முகபாவனைகள் மற்றும் உடல் மொழி அசைவுகளில் மூலம் வறுமையின்
கொடுமைகளை தனது இயலாமையை மிக நேர்த்தியாக
வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி, வழக்கம்
போல் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது
கதாபாத்திரத்தில் பெரும் பலம் சேர்த்து பார்வையாளர்
களிடம் எளிதில் கவரும் விதத்தில் ஈர்த்து விடுகிறார்.
மிகப்பெரும் பணக்காரராக இருந்தாலும் அனைத்தையும் இழந்து
பிரச்சனையில் சிக்கி போராடுகின்ற தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் அரவிந்த்சாமி,
கண்கள் மூலமாக பேசி எல்லோரிடம் கவனத்தை ஈர்க்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார்
அதிதி ராவ்,
உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் அவர்கள் மனதில் கவனத்தை இடம் பிடித்து விடுகிறார்.
நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், மூன்று
கதாபாத்திரங்களைப் போல் முக்கியத்துவம்
உள்ள வேடமாக பயணித்திருக்கிறார். சித்தார்த் ஜாதவ், தன் உடல் மொழி அசைவுகளின்
மூலமாக சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லுவதை வைத்து இருப்பது
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவில்
ஏழைகளும், பணக்காரர்கள் யார் ? என்பதை அப்பட்டமாக காட்டும்
நகரமாக மும்பை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆடம்பர
வாழ்க்கையை வெளிக்காட்டும் அரவிந்த் சாமியின்
வீட்டையும், ஏழ்மையை பிரதிபலிக்கும்
விஜய் சேதுபதியின் வீட்டையும்
காட்சிப்படுத்திய விதமான கவனம் ஈர்க்கின்றன.
படத்தில் வசனம் இல்லை என்றாலும், தன் இசையை பேச வைத்திருக்கிறார்
ஏ.ஆர்.ரஹ்மான். ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப வகையிலான பின்னணி இசை,
படத்தின் காட்சிகளைப் போல் பார்வையாளர்களின் மனதிலும் பல வகையான மாற்றங்களை
உண்டாக்குகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்
கிறது. பாடல்களின் வரிகள் கவரவில்லை
என்றாலும், அதுல உள்ள இசை கவனம் ஈர்க்கிறது.
படத்தொகுப்பு ஆசிஸ் மாத்ரே மற்றும் கலை இயக்குநர்
துர்கபிரசாத் மஹாபத்ரா ஆகியோர் பணி
படத்திற்கு கூடுதல் பெரிய பலம் சேர்த்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர்,
வசனம் இன்றி படத்தை இயக்கியிருப்பதால், சொல்ல நினைத்த கருத்தை
பார்வையாளர்
களிடம் நேர்த்தியாக கடத்திக் கொண்டு போயிருக்கிறார்.
ஒரு மனிதனின் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வு பணம்
தான் என்று பேசியிருக்கிறார். இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர், தற்போதைய
காலக்கட்டத்தில் லஞ்சமும், ஊழலும் பெருக்கொண்டு இருக்கும் தருவாயில் அந்த கடலில் நீந்தி
ஓடுவதையும், அதுல நீச்சலத்தயபடியே வாழ்ந்துக் கொண்டிருக்கும்
அரசியல்வாதிகளைப் பற்றி பேசியிருக்கிறார் இந்த வகையான லஞ்சத்தில் நீதி
துறையும் எப்படி சிக்கி சீரழிக்கின்றன என்பதை
தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பணத்தின் பலத்தை ரூபாய் நோட்டுகளில் இருக்கும் காந்தியின்
சிரிப்பு மூலம் பேசிய இயக்குநர், காந்தியின் ”மாற்றத்தை
உன்னில் இருந்து தொடங்கு” என்ற வாசகம் மூலம் பணம்
மட்டுமே வாழ்க்கை இல்லை,
என்பதையும் உணர்த்தியிருக்
கிறார். வசனம் இல்லாததால்
கதாபாத்திரங்களின் சிறு சிறு அசைவுகளையும் மிக கவனமாக
பார்த்தால் மட்டுமே படம் என்ன சொல்கிறது, என்பதை
புரிந்துக்கொள்ள முடியும் என்பதை, திரைக்கதையில்
நடிகர்களின் நடிப்பில் மட்டுமே
முன்னிலைப் படுத்தப்பட்டிருப்
பதும், படம் சற்று
மெதுவாக நகர்வது சிறு குறையாக இருக்கிறது.
இருப்பினும், வசனம் இல்லாமல் சூழல்களையும்,
உணர்வுகளையும் வெளிக்காட்டிய நடிகர்களின் நடிப்பு அத்தகைய
குறைகளை மறைத்து படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.
படம் பார்த்தத்தில் “காந்தி டாக்ஸ்” மக்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் உண்டு சம்பந்தமான எதார்த்தமாக திரைப்படம். இந்த திரைப்படத்தை . அனைவரும் திரையரங்குகளில் அவசியம் கண்டிப்பாக பார்க்க பார்க்க வேண்டிய திரைப்படம்…