காந்தி கண்ணாடி”திரைப்பட விமர்சனம்…

Share the post

காந்தி கண்ணாடி”

திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
கேபிஒய்.பாலா , நமிதா கிருஷ்ணமூர்த்தி ,
பாலாஜி சக்தி வேல்,‌ அர்ச்சனா,

நிகிலா சங்கர்,ஜீவா சுப்ரமணியன்,
ஆராத்யா ரீத்து சாரா ,

அமுதவாணன், மனோஜ் பிரபு , மதன் , மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :-ஷெஃரிப் .

மியூசிக் :- விவேக் – மெரிவின்.

ஒளிப்பதிவு :- பாலாஜி கே. ராஜா.

படத்தொகுப்பு:-
சிவநந்தீஸ்வரன்.

தயாரிப்பாளர் :- ஆதிமூலம்.
அமுதவாணன் கிரியேஷன்ஸ் – ஜெய்கிரண் .

காதலியை கைப் பிடிப்படித்த நாளில் இருந்து தனது சொத்து மற்றும்

சொந்தங்களை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து

செக்யூட்டி வேலை செய்து வரும், ஜமீன் குடும்பத்தை சேர்ந்த

பாலாஜி சக்தி வேல், தனது காதல் மனைவியுடன்

மகிழ்ச்சியாக சென்னையில்
வாழ்ந்து வருகிறார்.

இந்த தம்பதிகளுக்கு குழந்தை வாரிசுகள் யாரும் இல்லை
இருந்தாலும்,

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு , காதல், அவர்கள் காதலித்த தொடங்கிய நாளில்

இருந்து அறுப்பது வயது வரை அப்படியே மாறாமல் இருக்கின்றனர் .

இதற்கிடையே, தனது காதல் மனைவி அர்ச்சனாவின்

அறுபதாவது கல்யாணம் ஆசையை

நிறைவேற்றுவதற்
காக, பணம் மட்டும் வாழ்க்கை என்ற மனநிலையில் இருக்கும் நாயகன்

பாலாவை, பாலாஜி சக்திவேல் சந்திக்கிறார்.
யூடியூப் நிகழ்ச்சி வடிவமைப்பு

நிறுவனம் நடத்தி வரும் பாலா.

பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா தம்பதியின்

அறுபதாவது கல்யாணத்தை லாபம் தரும் ஒரு நிகழ்வாக மட்டுமே பார்க்கிறார்.

ஆனால், பாலாஜி சக்திவேல் தனது காதல் மனைவியின் ஆசை மட்டும் இன்றி

ஏக்கமாக பார்ப்பவர், எப்படியாவது அவரது

ஆசைப்பட்டது போல் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்.

அர்ச்சனாவின் ஆசைப்படி அறுபவதாவது கல்யாணத்தை மிக

பிரமாண்டமாக நடத்த பாலா கேட்ட பல லட்சங்களுக்கு மேலான பணம்

பாலாஜி சக்திவேலுக்கு கிடைக்கிறது.

பணம் கிடைத்த மகிழ்ச்சியில் பாலாவும்,

மனைவிவியின் ஆசையை நிறைவேற்ற

போகிறோம், என்ற மகிழ்ச்சியில்

பாலாஜி சக்திவேலும் இருக்க, திடீரென்று மத்திய அரசு

அறிவிப்பின் மூலம் அவர்களிடம் இருக்கும் ஐநூறு, இரண்டாயிரம், ரூபாய் நோட்டுகள்

பணம் அன்று முதல் செல்லாமல் போகின்றன.

அன்றைய தினம் அறிவிப்பு வெளிவருகிறது.

அந்த பணத்தை மாற்றிவிட வேண்டிய சூழ்நிலயில் எப்படியாவது அதை செய்துவிடவேண்டிய

முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அந்த பணத்தைக் கொண்டு

கல்யாணத்தை நடத்திவிட வேண்டும். என்று பாலாஜி

சக்திவேல் நினைக்கிறார் , அந்த சமயத்தில் பணத்தை

மாற்றுவதை லாபத்துடன் பார்க்கிறார் நாயகன் பாலா,

பாலாஜி சக்திவேல் ஆசைப்பட்டது போல்,

ஆறுவதாவது கல்யாணத்தை நடத்தா ? இல்லையா ? என்பதை இந்த

கதையில் நகைச்சுவை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான்

இந்த கதைக்களம் தான் ‘‘காந்தி

கண்ணாடி‘‘.
நாயகனாக நடித்துள்ளார்.

பாலாவுக்கு இந்த தான் முதல் படம் என்பதை படத்தின்

காட்சியில் தெளிவாக தெரிகின்றன. தொலைக்காட்சி மற்றும்

பாலாவுக்கு வெள்ளித்திரையில் பாலாவின் முகம் சில மாற்றங்கள் தெரிகின்றன

.அவர் நடிப்பில் இன்னும் நிறைய செய்ய வேண்டி

இருக்கு என்பது தான் நிஜம் . டான்ஸ் நல்லவே செய்கிறார்,

தனது டைமிங் காமெடி வசனங்கள் பேசி சிரிக்க வைத்திருக்கிறார்,

உணர்வுபூர்ணமான காட்சியில் பார்வையாளர்களை

சில காட்சியில் கண்கலங்க வைக்ககிறார்.

இது அவரது முதல் படம் என்பதால் அடுத்த படங்களில் பாலாவின் நடிப்பு திறமையின் மூலம்

அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டுமென்றுப் பாராட்டு பெரும் வகையில் நடக்க

வேண்டுமென என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த படத்தின் உண்மையான நாயகனாக நடித்துள்ள டைரக்டர்

பாலாஜி சக்திவேல், (ஜமீன்)எதார்த்தமான நடிப்பில் மட்டும் இல்லாமல் அவரது

நடிப்பில் உணர்வுப்பூர்வமான நடிகர் என கவனம் ஈர்த்துள்ளார்.

தனது காதல் மனைவி (கண்ணம்மா )மீது அவர் காட்டும் அதிகமான அன்பை,

சில இடங்களில் அவரது நடிப்பில் அளவில் அதிக

இருக்கின்றன. குறிப்பாக, உடல்மொழியை

வெளிப்படுத்துவதில் பல படங்களில் செய்வது கொஞ்சம் அதிகம்.

நாயகியாக நடித்துள்ளார். நமிதா கிருஷ்ணமூர்த்தி,

அவருக்கு கொடுத்த வேலையை சரியா செய்திருக்கிறார்.

பாலாஜி சக்திவேலின் மனைவியாக நடித்திருக்கும் அர்ச்சனா தனது

அனுபவ மிக்க நடிப்பின் மூலம் கதாபாத்திற்கும் படத்திற்கும் ஏற்பே உணர்வு பூர்ணமான

நடிப்பில் மூலம் அவரது அடையாளமாக பதிவுச் செய்த்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து

சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

அனைவரும் இந்த திரைக்கதையின் கதாப்பாத்திரத்தின் ஏற்பே பலமாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா, கதையின் ஒட்டத்திற்கு பக்கப் பலமாக காட்சிகளை

சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் . இதுல வரும்

இரவு காட்சிகள், கோவில் திருவிழா, மற்றும் அனைத்து

காட்சிகள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். இதுல வரும்

கதாபாத்திரங்களையும் தெளிவாக காண்பித்திருக்கிறார்

விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கொண்டாடும்

வகையில் கேட்கும்படி இருக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பலம்

சேர்க்கிறது.
இயக்குநரின் கதை , திரைக்கதை

எளிமையாக இருப்பதால் , சுவாராஸ்யமாகவும், எதிர்பார்ப்புடனும் படத்தை பயணிக்க வைத்திருகிறார்.

படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் .
எழுதி இயக்கியுள்ள ஷெஃரிப், நிறைய காதல்

திருமணங்கள், இளமை மற்றும் , ஆறுபது வயதை தாண்டியும், அன்பை வெளிப்படுத்தி

திகடும் வகையில் காதலிப்பது தான் உண்மை காதல்,

என்ற கருத்தை அழுத்தமாக பதிவுச் செய்திருக்கிறார்.

குடும்பத்தோடு பார்க்க கூடிய விதத்தில் படத்தை நாகரீகமாக கதையை சொல்லியுள்ளார்

இயக்குநர் ஷெஃரிப், இளமை பருவத்தில் மட்டும் இல்லாமல்

முதுமையான காலத்தில் தொடங்கிய

உண்மையான காதல் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும்விதத்தில்

இந்த கதைக்களத்தை பதிவச் செய்திருக்கிறார் .
படம் பார்த்தத்தில். காந்தி கண்ணாடி

படத்தில் அவரது வரலாற்றின் பற்றிய கதையை கொஞ்சமும் தொடக்கூட

முயற்சிக்க வில்லை .அந்த கதாப்பாத்திரத்தின் அவரது அகிம்சையை பற்றி சொல்லவில்லை .

பேர் மட்டும் .தான் காந்தி . கண்ணாடி மட்டும் யாருடையது,என்று கொஞ்சம்

சொல்லுங்கள். இருந்தாலும் இது ஒரு பொழுதுபோக்கு

திரைப்படம் அனைவரும் வெண்த்திரையில் கண்டுகளிக்கலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *