
🎬From The Desk of “கட்டிங் கண்ணையா”
குமுதம் ஸோ கால்ட் ஓனர்வ பி.வரதராஜன் நோட்டீஸ்: 'வெள்ளை' விளம்பரத்தில் 'கருப்பு' பின்னணி! ஒரு பேக்ட் ரிப்போர்ட்!
குமுதம் ஓனர் என்று சொல்லிக் கொள்ளும் பி.வரதராஜன் சார்வாள் பிடியில் உள்ள 75 வருஷப் பாரம்பரியம் கொண்ட குமுதம் பத்திரிகை சார்பில் இன்னைக்கு ஒரு ‘பப்ளிக் நோட்டீஸ்’ வெளியாகி இருக்கு. ஆனா, அந்த நோட்டீஸ்ல இருக்கிற ஒவ்வொரு வரிக்கும் பின்னாடி இருக்கிற அரசியலையும், உள்குத்துகளையும் ஒன்-பை-ஒன்னா அலசலாமா?
1. "75 ஆண்டுகால பாரம்பரியம்" - யாருடைய பாரம்பரியம்?
விளம்பரத்தோட ஆரம்பமே “75 ஆண்டுகாலப் பாரம்பரியம்”னு பில்டப் கொடுக்குது. வரம் கொடுத்த சாமிக்கே விபூதி அடிக்கிற கதையா, குமுதத்தை உருவாக்கிய உண்மையான வாரிசுகளான ஜவஹர் பழனியப்பன் குடும்பத்துக்கே ‘விபூதி’ பூசிப்புட்டு, இன்னைக்கு பாரம்பரியத்தைப் பத்தி நீங்க பேசுறதுதான் இந்த வருஷத்தோட ஆகச்சிறந்த நகைச்சுவை. பாரம்பரியம்ங்கிறது அந்தப் பெயருக்குத்தான் இருக்கே தவிர, இப்போ நிர்வாகம் பண்ற கைக்கு இல்லைங்கிறதுதானே கசப்பான உண்மை!
2. "போலியான உரிமையாளர்கள்" -
இதில் ஒரிஜினல் யாரு? யாரோ சில பேர் குமுதத்தின் உரிமையாளர்கள்னு சொல்லி மோசடி செய்றதா நீங்க சொல்லியிருக்கீங்களே… இங்கதான் மேட்டரே இருக்கு! நிஜமான உரிமையாளர்கள் யாருங்கிற கேஸே இன்னும் கோர்ட்ல ஜவ்வு மாதிரி இழுத்துட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது, ‘போலி உரிமையாளர்கள்’னு நீங்க யாரைச் சொல்றீங்க? உண்மையான வாரிசுரிமை உள்ளவங்களையா? இல்ல, உங்களுக்கே தெரியாம வேற ஒரு டீம் ஃபீல்டுல இறங்கிடுச்சோ? நீங்க சொல்லும் அந்த போலி டீமிலும் சில போலிகள் என்னையும் போனில் மிரட்டியது தனிக் கதை — ஆனால் பாவம் – அவர்கள் வெறும் 300 ரூபாய்க்கு மட்டுமே மதிப்புடையவர்கள் என்பது தனி எபிசோட்!
3. "ஐடி கார்டு" -
அந்த ஜெராக்ஸ் கார்டையா கேட்கச் சொல்றீங்க? “அங்கீகரிக்கப்பட்ட ஐடி கார்டைக் கேட்டுச் சரிபார்க்கவும்”னு ஒரு வரி இருக்கு. ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்ற நீங்க, கைவசம் வச்சிருக்கிற ஐடி கார்டே ஒரு ‘ஜெராக்ஸ்’ மாதிரிதான் இருக்குன்னு சினிமா வட்டாரத்துல ஒரு பேச்சு உண்டு. ஒரிஜினாலிட்டி இல்லாத ஒரு இடத்துல இருந்து ஐடி கார்டு பத்திப் பேசுறது, ‘திருடன் கையில சாவி கொடுத்த கதையா’ இருக்கு வரதராஜா சாரே!
4. "நேர்காணல் கொடுக்காதீங்க" -
இது எச்சரிக்கையா? இல்ல பயமா? திரைத்துறையினரை நேர்காணல் கொடுக்க வேண்டாம்னு கேட்டுக்கிறீங்க. நிஜத்தைச் சொல்லப்போனா, குமுதம்னு ஒரு பிராண்ட் இப்போ இருக்கிற நிலைமைக்கு, யாரும் தானா வந்து பேட்டி கொடுக்க மாட்டாங்களோங்கிற பயத்துல போடப்பட்ட வரி மாதிரி இது தெரியுது. உங்க ‘பேக்(ட்)கரி’ குமுதத்துக்கு மவுசு குறைஞ்சுட்டதால, மத்தவங்க யாராவது அந்தப் பேரைச் சொல்லி ஸ்கோர் பண்ணிடப் போறாங்களோங்கிற கலக்கமோ?
5. "டாக்டர் என நம்பும் அப்பாவிகள்"
இந்த விளம்பரமே ஒரு ‘வரி விளம்பரம்’தான். பல பேர் இன்னும் உங்களை அந்த நிறுவனத்தோட ‘டாக்டர்’னு (அதாவது ஓனர்னு) நம்பிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இந்த விளம்பரம் மூலமா, “நான்தான் இன்னும் சேர்ல இருக்கேன்”னு நீங்க உரக்கச் சொல்ல வர்றீங்க. ஆனா, சர்ச்சை தெரிஞ்சவங்களுக்குத் தெரியும், இது வீழ்ந்துட்டு இருக்கிற ஒரு சாம்ராஜ்யத்தைக் காப்பாத்தப் போடப்படுற கடைசி கட்டப் போராட்டம்னு!
கட்டிங் கண்ணையாவின் கண்டனம்:
எனக்கு கண்ணொளி கொடுத்த வரதராஜா சாரே, விளம்பரம் கொடுத்து மக்களை நம்ப வைக்கிற காலமெல்லாம் மலை ஏறிடுச்சு. குமுதம்ங்கிற அந்தப் பொக்கிஷத்தை உருவாக்கியவங்களுக்கு சேர வேண்டியது சேராத வரைக்கும், நீங்க எத்தனை நோட்டீஸ் கொடுத்தாலும் அது ‘நோட்டீஸ்’ கிடையாது, வெறும் ‘வேஸ்ட் பேப்பர்’தான் !
அடிசினல் நோட்ஸ்
~டூப்ளிகேட் குமுதம் கும்பலே.. என்னை 300 அல்லது 500 ரூ- கூலியாட்கள் மூலம் கோபமூட்டும் திருப்பணிக்கு முட்டுக்கட்டை போடுங்க ப்ளீஸ்~