ஃபோர்த் ஃப்ளோர் திரைப்பட விமர்சனம்

Share the post

ஃபோர்த் ஃப்ளோர் திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : – ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்ரமணிய சிவா,

தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:- எல்.ஆர்.சுந்தர
பாண்டியன்.

மியூசிக் : – தரன்குமார்.

ஒளிப்பதிவு:-
ஜெ.லக்ஷ்மண்.

படத்தொகுப்பு:-
ராம் சுதர்ஷனன்.

தயாரிப்பாளர்கள்: –
ஏ .ராஜா

சென்னை பெரும் நகரத்தில் கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதல் பெற்று

மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையில்

புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்

ஒன்றில், யாரும் குடிபோகாத நான்காவது மாடியில்

உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். தனது பணியுடன், தன்னை காப்பாற்றும்படி

தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள்

காதலி‌ஒருவரை‌ தேடுகிற முயற்சியில் ஈடுபடுகிறார்.

அப்போது அந்த வீட்டில் அவரது முன்னாள்

காதலியின் படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார்,

அந்த இரவு நேரத்தில் தொடர்ந்து வரும் அமானுஷ்யம் போன்ற ஆவி

தொடர்ந்து வருகிற கனவுகளில் மிகவும் பாதிக்கப்படுகிறார்.
அந்த

கனவு என்றால், உண்மையில் நடப்பது போன்ற இருக்கும் சில

நேரத்தில் தன்னை சுற்றி ஏதோ ஒன்று நடப்பதை‌‌ அவர்

உணர்ந்துக் கொள்ளும் ஆரி அர்ஜுனன், தனது

கனவுகளுக்கான தீர்வை நோக்கி பயணித்த போது,

பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துக்

கொள்கிறார். அந்த உண்மைகள் என்ன ?, மாயமான அவரது

முன்னாள் காதலி கிடைத்தாரா ?,

இல்லையா? அவருக்கும் ஆரியின் அந்த கெட்ட

கனவுகளுக்கு தொடர்பு ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?, ஆகிய கேள்விகளுக்கான

விடையை திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்வது தான்

“ஃபோர்த் ஃப்ளோர்”திரைப்பட கதைக்களம்.

கணினி துறையில் பணியாற்றும்

இளைஞர் கதாபாத்திரமாக இருந்தாலும், பல மர்ம முடிச்சுகளை

அவிழ்த்து கதையை நகர்த்தி செல்லும் துப்பறிவாளராக ஆரி பயணிக்கிறார்.

காதலி பிரிந்த விரக்தியில், தனது குழந்தை பற்றிய உண்மை தெரிந்த உடன்

வெளிக்காட்டும் குற்ற உணர்ச்சி, தொலைந்த காதலியை

எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற மன போராட்டம், அமானுஷ்ய

விஷயங்களில் பயப்பட செய்து அதனுள் இருக்கின்றன மர்மங்களை

கண்டுபிடிப்பது அதுல காட்டும் தீவிரம் என படம்

முழுவதும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆரி, தனது

கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

பவித்ரா மற்றும் தீப்ஷிகா என இரண்டு

கதாநாயகிகள் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும்

அளவாக பயணப்பட்டுள்ளார்
கள் தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கிறார் சுப்பிரமணிய சிவா,

முதல் பாதியில் முக பாவனைகளால் மிரட்டினாலும்,

இரண்டாம் பாதியில் கொஞ்சம் நடிப்பின் மூலமாகவும் மிரட்ட செய்கிறார்.

இருப்பினும், அமானுஷ்யங்
களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது,

அவரது வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை.

தலைவாசல் விஜய், ஆரியின் மகளாக நடித்திருக்கிறார்

சிறுமி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள்

திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

தரண்குமார் இசையில், கு.கார்த்திக் வரிகளில் பாடல்கள்

கேட்கும்படி இருப்பினும், ஏற்கனவே கேட்ட உணர்வை

கொடுக்கின்றன. பின்னணி இசை திகில் காட்சிகளில்

படபடப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் அமைந்திருக்
கின்றன.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண், தலைப்புக்கு நியாயம் சேர்க்கும்

விதமாக அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நான்காவது தளத்தை காட்டி

பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார்

மற்றபடி ஒளிப்பதிவில் பெரிதாக ஒன்றுமில்லை.

திகில், கிரைம் திரில்லர், சமூக பிரச்சனை என பல அம்சங்கள் நிறைந்த திரைக்கதையை

எதிர்பார்ப்புமிக்
கதாக நகர்த்திச் சென்றிருக்கிறார் ராம் சுதர்ஷனின் படத்தொகுப்பு.

எழுதி இயக்கியிருக்கிறார் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், திகில் பாணியிலான

கதைக்களம் என்றாலும், அதை வெறும் திகில் காட்சிகளின் பின்னணியோடு

மட்டுமே சொல்லாமல், காதல், கணவன் – மனைவி உறவு, குழந்தை செண்டிமெண்ட்,

சமூக பிரச்சனை, கிரைம் திரில்லர் போன்ற பல்வேறு

அம்சங்களை பலவித அடுக்குகளாக கொண்டு

வடிவமைத்திருக்
கின்றனர் திரைக்கதையும், திருப்பங்கள் நிறைந்த

காட்சிகளும் படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைத்திருக்கிறது.

கதாநாயகனை சுற்றி நடக்கும் அமானுஷ்யம் மற்றும் அதற்கான தீர்வை நாயகனே

கண்டறியும் விதம் கதாநாயகனுக்கு முக்கியத்துவம்

கொடுத்து, மற்ற கதாபாத்திரங்களை பலம் இழக்க செய்துவிடுகிறது.

இதனால், ஆரம்பத்தில் பரபரப்பாக நகர்ந்த கதை ஒரு கட்டத்தில்

மெதுவாக நகர்கிறது. இருந்தாலும், தொலைந்த காதலியின் நிலை,

அவரது குழந்தை பற்றிய உண்மை, அவர்களை கண்டறியும் கதாநாயகன், ஆகியவை அடுத்து என்ன ? என்ற கேள்வியோடு

படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன.

படம் பார்த்தத்தில், “ஃபோர்-த் ஃப்ளோர்” தீகில், க்ரைம், த்ரில்லர், உள்ளன

அனைவரும் பீதியடைய வைக்கின்றன. அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *