தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை உலக நாயகன் Dr. கமல் ஹாசன் அவர்கள் திறந்து வைத்தார்



இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள Dr. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத்துறை துணை
அமைச்சரும், திரைப்பட கலைஞர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் 35வது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பத்மபூஷன் கமல் ஹாசன் அவர்கள் அமரர் ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் “இலவச குடும்ப சுகாதார அட்டை” வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளை வழங்கினார் உலகநாயகன் Dr. கமலஹாசன் அவர்கள். இதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பயன் பெற்றார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய திரு. கமலஹாசன் அவர்கள் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்கள் உடனான நட்பு குறித்தும், திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களை வாழ்த்தி, பாராட்டினார்.



அதனை தொடர்ந்து அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களுடன் நடித்த நடிகர் பிரபு, நடிகை லதா, இயக்குனர் RK செல்வமணி, நடிகர் பாக்கியராஜ், நடிகர் கவுண்டமணி, நடிகர் செந்தில், நடிகை ஜெயசித்ரா, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் SV சேகர், தயாரிப்பாளர் K ராஜன், நடிகை ராதிகா, நடிகர் ராஜேஷ், நடிகை குட்டி பத்மினி, நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், நடிகர் பிரசாந்த், நடிகர் சின்ன ஜெயந்தி உள்ளிட்ட முன்னனி நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்தும் அவர் செய்த சேவைகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.



மேலும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமது தந்தை அமரர் திரு ஐசரி வேலன் அவர்களின் நினைவு நாளான மே 14 ஆம் தேதி ஆண்டுதோறும் நலிந்த நாடக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விருந்து மற்றும் புத்தாடைகள் வழங்கி சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.