“என்றென்றும் கே.பி “
இந்திய சினிமாவின் பிதாமகர் என கொண்டாடப்படும் “பத்ம ஸ்ரீ” “தாதாசாஹேப் பால்கே” ஸ்ரீ கே.பாலச்சந்தர் பிறந்த நாளை ஜூலை மாதம் முழுவதும் கொண்டாடும் “என்றென்றும் கே.பி “
சிக்கலான தனிப்பட்ட உறவுகள், தைரியமான சமூக கரு மற்றும் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்காற்றிய கே. பி புதுமையான பல திரைப்படங்களை இயக்கி சாதனை படைத்தவர்.
பெண்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் பற்றி வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் அழுத்தமாக காட்சிப்படுத்தியவர்களில் பாலசந்தருக்கு பெரும் பங்குண்டு.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், சரிதா, சுஜாதா, மோகன், பிரகாஷ் ராஜ் என இவரால் ஜொலித்த நட்சத்திரங்களின் பட்டியல் நீளமானது.
அவருடை பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இயக்குனர் வசந்த், இயக்குனர் சரண்,திருமதி புஷ்பா கந்தசாமி,திருமதி கீதா கைலாசம், எழுத்தாளர் இந்திரன் சௌந்தர்ராஜன், டெல்லி கணேஷ், இசைக்கவி ரமணன், கவிதாலயா கிருஷ்ணன், நடிகை சுலக்ஷனா, எம்.எஸ் பாஸ்கர்,மற்றும் சிலர் வாரம் தோறும் என்றென்றும் கே.பி சிறப்பு நேரலையில் பங்கேற்கின்றனர்.
இந்திய சினிமாவின் பிதாமகரை கொண்டாடும் இந்நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 5, 2023 வரை ஒவ்வொரு சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகிறது.