தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது

ஹர்ஷித் பிக்சர்ஸ் (S R HARSHITH PICTURES) சார்பில் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’. அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றை சொல்வதில்லை. பாலியல் குற்றங்களும், அதற்கான பழிவாங்குதல் என்ற பாணியில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், ‘மெய்ப்பட செய்’ படத்தில் பாலியல் குற்றங்கள் எதனால் நடக்கிறது? என்பது பற்றி விரிவாக பேசப்பட்டிருப்பதோடு, பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற தீர்வும் சொல்லப்பட்டிருக்கிறது.






சமூக அக்கறையோடு கிராமத்தில் வாழும் நான்கு நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தனது காதல் மனைவியோடு சென்னை வர நேரிடுகிறது. சென்னையில் வாழ வழி தேடும் அவர்கள் கண்முன்னே பாலியல் குற்றவாளிகளின் கொலைவெறியாட்டத்தை காண நேரிடுகிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து பகிரங்கமாக மக்களையும் காவல்துறையையும் தங்களது ரவுடித்தனத்தாலும், ஆளுமையாலும் அடிபணிய வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் இந்த கும்பலை தனி மனிதர்களாக இந்த கிராமத்து இளைஞர்கள் போராடி சமுதாயத்துக்கு முன் குற்றவாளிகளை தோலுரித்து காட்டியும், மக்களுக்கான நம் நாட்டின் சட்டம் தப்பு செய்தவர்களை தண்டித்ததா? இல்லை அப்பாவிகளை குற்றவாளிகளாக்கியதா? என்பது தான் இப்படத்தின் கதை.
சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படம் பார்ப்பவர்களுடன் கனெக்ட் ஆவது போல் படம் நகர்கிறது, என்று சொல்லி பாராட்டியதோடு, படத்தில் எந்தவித கட்டும் கொடுக்கவில்லையாம். சில காட்சிகளின் கோணத்தை மட்டும் மாற்றும்படி சொல்லியவர்கள், படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகளுக்காக படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
வரும் ஜனவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ’மெய்ப்பட செய்’ வழக்கமான படமாக இல்லாமல் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற ஜனரஞ்சகமான படமாக மட்டும் இன்றி, சமூக அக்கறையுடன் கூடிய தரமான படமாகவும் இருக்கும், என்று தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
’பார்வை ஒன்றே போதுமே’. ’பெரியண்ணா’. ’சாப்ளின்’ போன்ற படங்களில் பாடல்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இசையமைப்பாளர் பரணி. அவரது இசையில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மீண்டும் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் பரணி பட்டி தொட்டி எங்கும் பேசப்படுவார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாரதமே பாரதமே என்கிற பாடல் கேட்பவரையும் பார்ப்பவரை நிச்சயம் கண்கலங்க வைக்கும்.
நடனத்தை தீனா மாஸ்டர் ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்து அசத்தியுள்ளார். மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சியில் நான்கு சண்டைக்காட்சிகள் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் பாலியல் குற்றவாளிகளை களையெடுக்க ஒரு தீர்வாக கதை அமைத்து திரைக்கதை வசனம் எழுதி அறிமுக இயக்குநர் வேலன் சிறப்பாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் இந்தப் படத்திற்கு பக்கபலமாக கதை ஓட்டத்தோடு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ’மிருதன்’, ’சித்திரம் பேசுதடி-2’, ’ஆடாம ஜெயிச்சோமடா’. ’பரமகுரு’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணிபுரிந்த கே.ஜே.வெங்கட்ரமணன் இப்படத்திற்கு சிறப்பான படத்தொகுப்பை கொடுத்துள்ளார்.மக்கள் தொடர்பு தர்மதுரை மற்றும் சுரேஷ் சுகு இருவரும் பணியாற்றி உள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள “கஞ்சா பிசினறியே..” என்ற பாடல் ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சோசியல் மீடியாவில் வைராகி வருவதோடு, பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சமூக அக்கறை உள்ள படங்கள் தமிழ் சினிமாவில் அத்தி பூத்தார் போலதான் வருகிறது , அப்படி ஒரு படமாக உருவாகியுள்ள ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.