முதல் காதல் மரியாதை
எல்லோருக்கும் முதல் காதல் வருவது உண்டு. அதை நாம் காதலிக்கும் பெண்ணிடம் கூற தைரியம் வருவதில்லை. அப்படி காதலிக்கும் பெண்ணை கடைசிவரை காதலித்து கைப்பிடிப்போமா என்றும் தெரியவில்லை. காதலித்த பெண்ணை நாம் திருமணம் செய்து கொண்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு இல்லை தான். காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரின் தாயார் ஏற்பாடு செய்து விடுகிறார் இதை அறிந்த நாயகன் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கே புது மாப்பிள்ளை தாலியை கட்ட முற்படும்பொழுது அங்கிருந்து நாயகன் திரும்பி விடுகிறான். பின் நாயகன் துவண்டு விடாமல் தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறான். கடைசியில் தன் காதலியை கரம் பிடித்தானா ? இல்லை லட்சியத்தை அடைந்தானா ? என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் என்று படத்தின் இயக்குனர் நரேஷ் சிவன் தெரிவித்தார்.
விஷன் மூவி மேக்கர்ஸ் சார்பில் சாய் சுதாகர் “அலா நின்னு சேரி”என்ற தெலுங்கு படத்தை “முதல் காதல் மரியாதை. என்னும் பெயரில் தமிழில் தயாரித்து உள்ளார் .
இதில் தினேஷ் தேஜ் கதாநாயகனாகவும் ஹெப்பா பட்டேல், பாயல் ராதாகிருஷ்ணா கதாநாயகியகளாகவும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு –
ஆண்ட்ரூ பாபு
இசை -சுபாஷ் ஆனந்த் பாடல்கள் -சந்திர போஸ்
சண்டை பயிற்சி –
கிங் சாலமன்
எடிட்டிங் –
கோத்தகிரி வெங்கடேஸ்வரா ராவ்
மக்கள் தொடர்பு – வெங்கட்
தயாரிப்பு -சாய் சுதாகர்
வசனம் – சாய் ரமேஷ்
கதை திரைக்கதை இயக்கம் -நரேஷ் சிவன்
இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் இம்மாதம் (ஜூலை 26) ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.