அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது !

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இன்று 16.4.2021 முடிக்கப்பட்டது.



மிகச்சிறந்த ஒத்துழைப்பினை நல்கியதற்காக Pramod Films நிறுவனத்தாருக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதிலும் இந்த பொது முடக்க காலத்தில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பு பணிகளை துவங்க தயங்கி நின்றபோது, துணிவாக களமிறங்கி மிகச்சிறந்த திட்டமிடலுன் இப்படத்தினை தயாரித்தனர். புது ஐடியாக்களுக்கு அவர்கள் எப்போதும் மறுப்பு தெரிவுத்ததே இல்லை. விரைவில் பாடல்களை படமாக்கவுள்ளோம். படம் ரசிகர்களுக்கு மிகபெரிய விருந்தாக இருக்கும்

100 வெற்றி கூட்டணி, திலீப் சுப்பராயன் ஒருங்கமைத்த, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சி என இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை விதைத்துள்ளது.
