பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம்:
பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பிற்கான 10% இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது…
அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ரத்ன சபாபதி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின் 255 சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும்,
பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினை சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10% இட ஒதுக்கீடு ரத்து செய்து , தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பினை உடனடியாக எடுக்க வலியுறுத்தியும் அந்தக் கூட்டமைப்பினை சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…