“படித்ததில் பிடித்தது”


பெப்பர்ஸ் டிவியில் சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ”படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.


இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் ,முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ் ,எழுத்தாளர் கண்மணிராஜாமுகமது ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வார நிகழ்ச்சியில் கவிஞர் பேராசிரியர் ஞால ரவிச்சந்திரன் அற்புதமான புத்தகங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரகாஷ் குட்டி தொகுத்து வழங்குகிறார்.