என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை !!

Share the post

என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை

-பா இரஞ்சித்.

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது.

முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இதனை தொடர்ந்து திரைக்கதையாசிரியர் ஜா.தீபா அவர்கள் தொகுத்த “சமூக சிந்தனை” எனும் தலைப்பில் இயக்குநர் அருண் மதேஸ்வரன், இயக்குநர் P. S. வினோத்ராஜ், இயக்குநர் கௌதம்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண் மதேஸ்வரன் “திரைத்துறையில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் வருகைக்கு பிறகு மிக எளிதாக சமூக சிந்தனைக் கொண்ட திரைப்படம் எடுப்பதற்கு வழிவகுத்தது” என்று பேசினார். அடுத்ததாக பேசிய இயக்குநர் P.S. வினோத் ராஜ் “ஒரு வட்டத்திற்குள் அடங்கி கொள்ளாமல் திரைப்பார்வையை விரிவடைய செய்ய வேண்டும்” என்றும் பேசினார். கடைசியாக இயக்குநர் கௌதம் ராஜ் அவர்கள் “சமூக அரசியல் என்பது என் வாழ்வில் கலந்த ஒன்றாகும்” என்று பேசினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில்
மாடர்ன் சினிமா என்ற தலைப்பில் நடந்த கலந்துறையாடலில் இயக்குனர்கள் ஹலீதா ஷமீம், ஜியோ பேபி, P.S மித்ரன், தரணி இராசேந்திரன் ஆகியோர்கள் பங்குபெற்றனர். இயக்குனர் ஜியோ பேபி அவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் அரசியலுக்கும் சமூகத்தில் நடக்கும் அரசியலுக்கும் இடையேயான தொடர்பே என் சினிமாவின் பிரதிபலிப்பு என்று பேசினார்.

இயக்குனர் P.S மித்ரன் அவர்கள் சாதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் அடிப்படையில் எடுக்கப்படும் படங்களை பார்க்கும்போது ரொம்ப கேளிக்கையாக இருக்கிறது என்று விமர்சித்தார்.

இயக்குனர் ஹலீதா ஷமீம் அவர்கள் தன்னுடைய படைப்புகளில் காட்சிப்படுத்தப்படும் கதாபாத்திரம் ஒருபோதும் தவறான சித்தரப்பில் உருவாகாது என்று பேசினார்.

அவரை தொடர்ந்து, இயக்குனர் தரணி இராசேந்திரன் அவர்கள் யாத்திசை ஒரு உலக சினிமா எனவும் அவர் அதில் பழந்தமிழ் மொழியை பயன்படுத்தியதாக கூறினார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் அதியன் ஆதிரை, இயக்குனர் பா. ரஞ்சித், கலை இயக்குனர் இராமலிங்கம், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் தமிழ் பிரபா ஆகியோர்கள் கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட இயக்குனர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

PK கடைசி நாளான 10.04.2024 நிகழ்வில் மாமன்னன் படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குனர், கலை இயக்குனர், படத்தொகுப்பாளர், சவுண்ட் டிசைனர் அனைவரும் பார்வையாளர்களோடு கலந்துரையாடினர்.

அதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “என் படத்தை பார்ப்பதன் மூலம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான கேள்விகள் எழும்,
அதை தொடர்ந்து உங்களுக்குள் விவாதம் செய்யுங்கள்” என்று பேசினார்.

அதன் பிறகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நவ் & தென் ஆவணப்படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ஜோதி நிஷா அவர்கள் கலந்துரையாடினார். அதன் பிறகு இயக்குனர் ரிந்து தாமஸ் மற்றும் சுஷித் கோஷ் ஆகியோர்கள் இயக்கிய ரைட்டிங் வித் ஃபைர் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அதனை தொடர்ந்து
தலித் சினிமா எனும் தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் இளம்மருது தொகுத்து வழங்க இயக்குனர்கள் பா. இரஞ்சித், ஜெயகுமார், டாக்டர் பிஜு தாமோதரன் ஆகியோர்கள் கலந்துரையாடினர்.

இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில்
சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்க பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணர வேண்டும். என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை என்று விமர்சித்தார்.

இயக்குனர் ஜெயகுமார் அவர்கள் புத்தமும் அவரது தம்மமும் நூலே தன் படங்களை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறது என்று பேசினார்.

இயக்குனர் Dr.பிஜு அவர்கள் என் கதையை என் வாழ்வியலின் அடிப்படையில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என் படங்களும் இருக்கும் என பேசினார். இறுதியாக தண்டகாரண்யம் படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை, பாட்டில் ராதா படத்தின் இயக்குனர் தினகரன், மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் தமிழ் எழுத்தாளர் தமிழ் பிரபா ஆகியோர்கள் கலந்துரையாடிய இயக்குனர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பல படங்கள் திரையிடப்பட்டு, PK ரோசி திரைப்பட திருவிழாவின் கடைசி நாள் இனிதே நிறைவடைந்தது.

மேலும் PK rosy திரைப்பட விழாவை தொடர்ந்து வருகிற 13/04/2024 ல் தம்மா நாடக விழா, 15/04/2024 ல் நித்தம் புகைப்பட விழா, 24/04/2024 – 30/04/2024 கலையும் அழகியழும் ஓவிய கண்காட்சி மற்றும் 27/04/2024 & 28/04/2024 தலித் வேர்சொல் இலக்கிய கூடுகை போன்ற பல நிகழ்வுகள் இம்மாதம் முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *