எலக்சன் திரை விமர்சனம்!!

Share the post

எலக்சன் திரை விமர்சனம்!!

ரீல் குட் பிலிம்ஸ்
ஆதித்யா தயாரித்து :
தமிழ் எழுதி இயக்கி யவிஜய் குமார்ரீல் குட் பிலிம்ஸ்
ஆதித்யா தயாரித்து :
தமிழ் எழுதி இயக்கி ய விஜய் குமார் நடித்து வெளியாயிருக்கும் படம் எலக்சன்

விஜய் குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியன், பவல் நவகீதன், திலீபன்.மற்றும் பலர் நடித்துள்ளனர்

இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவாளர்: மகேந்திரன் ஜெயராஜூ
அதிரடி: ‘ஸ்டன்னர்’ சாம்
எடிட்டர்: சி.எஸ்.பிரேம்குமார்
கலை இயக்கம்: ஏழுமலை ஆதிகேசவன்
ஆடை வடிவமைப்பாளர்கள்: கஸ்தூரி இரானி
ஒப்பனை: ரகுராமன், வேல்முருகன்
வசனம் எழுதியவர்: அழகிய பெரியவன், விஜய் குமார், தமிழ்
வீடியோ பாடல்கள் & விளம்பரத் தொகுப்பாளர்: நாஷ்
ப்ரோ: யுவராஜ்
பதவி உயர்வுகளின் தலைவர்: எஸ். தினேஷ்
ஸ்டில்ஸ்: அன்பு
விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன் , பரணிதரன்
ஒலி வடிவமைப்பாளர்: ரெங்கநாத் ரவி
ஒலிக்கலவை: கண்ணன் கண்பத்
வண்ணம்: ரங்கா
Vfx & Di : Pixel Light Studios
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: சி.ஹரி வெங்கட்
நடனம்: ஸ்ரீகிரிஷ்
இணை இயக்குனர்: சித்தார்த் – சங்கர் பாபு – யாக்னா
இணை இயக்குனர் – நாகராஜ் ராக்கேப்பேன் – சதீஷ் சௌந்தர்
உதவி இயக்குனர்கள் – மாரி பரமகுரு – எருக்கம்பட்டு மணிவண்ணன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – விஜய் குமார்
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஆர்.பாலகுமார்

ஒரே கட்சியில் இளம் வயது முதல் பல ஆண்டுகளாக உழைத்தும் எந்தவித பதவியையும் அடையாமல் கடைக்கோடி தொண்டனாகவே இருந்து வரும் நல்லசிவம் (ஜார்ஜ் மரியான்). அவரது மகன் நடராசன் (விஜய்குமார்) அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர். தங்கை கணவரின் தூண்டுதலால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார் நடராசன். இது அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகப் பெரிய சிக்கல்களை உண்டாக்குகிறது. சில உயிர்களும் போகின்றன. தடைகளைக் கடந்து தேர்தலில் நடராசன் வென்றாரா? சிக்கல்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்தார்? என்பதே ‘எலக்சன்’ படத்தின் மீதிக்கதை .

நாயகனாக விஜய்குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திபாராட்டை பெறுகிறார்.

அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்துள்ளார்.

ஹீரோவின் அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான், மாமாவாக வரும் பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி என அனைவருமே அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தாவின் இசை ரசிக்க வைக்கிறது

மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

உள்ளாட்சி அரசியல் எந்த அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சுவாராஸ்யமாகசொல்லியுள்ளார் இயக்குநர் தமிழ். பாராட்டுக்கள

மொத்தத்தில்

*எலக்சன் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *