சர்வதேச உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கல்வியியல் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் டாக்டர் வி.அமலன் ஸ்டான்லி, விப்ரோ குறித்த ஆய்வு பற்றியும் அதன் திறன் குறித்தும் கூறும்போது,
“நாங்கள் விப்ரோவை அதனுடைய இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பொருட்களுக்காக சோதனை செய்து பார்த்தோம்.. அதில் 11 விதமான மூலிகை பொருட்கள் அடங்கியிருப்பதை கண்டுபிடித்தோம். அந்த மூலிகைகள் பொதுவாக நம் வீட்டு கொல்லைப்புறத்திலேயே காணப்படும். ஆய்வுக்கூடத்தில் வைத்து நோய்க்கிருமி உயிரினத்துக்கு எதிராக விப்ரோவை சோதனை செய்து பார்த்தபோது, மெதுவான செய்லபாட்டிலும் கூட, நோய்க்கிருமி உயிரினத்தை ஒரு மணி நேரத்தில் கொல்லும் திறன் உடையதாக இருக்கிறது.
மேலும் இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று 5000 எம்ஜி / கேஜி என்கிற எடை அளவு கொண்ட விலங்குகள் மீதும் பரிசோதித்துப் பார்த்ததில் இது ரொம்பவே பாதுகாப்பானது என்பதும் தெரியவந்தது இதன்மூலம் இது மனித பயன்பாட்டுக்கு உகந்தது என்பது தெளிவாகியுள்ளது
மேலும் மனித உயிர்களிடத்தில் ஏற்படும் எந்தவகையான மேல் சுவாச தொற்றையும் (upper respiratory infection) விப்ரோ குணப்படுத்த கூடியது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
ஐசிஎம்ஆர் (ICMR) மற்றும் நிறுவன நெறிமுறைகள் குழுவின் (institutional ethics committee) ஒழுங்குமுறைகளின்படி, இரண்டு வாரங்கள் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினோம். நான்கு நாட்கள் கால அவகாசத்துக்குள்ளாகவே விப்ரோ எட்டுவிதமான உயிரினங்களில் உள்ள நுண்ணுயிரிகளை கொல்லும் திறன் கொண்டது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறோம்.
அந்த வகையில் விப்ரோ பாதுகாப்பானது மற்றும் .மனித உயிர்களிடத்தில் ஏற்படும் எந்தவகையான மேல் சுவாச தொற்றையும் (upper respiratory infection) விப்ரோ குணப்படுத்த கூடியது என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்..