திரையை கிழிக்காதீர்கள்!
தற்பொழுது பொதுத் தளங்களில்
ஒரு படத்தை தோல்வி படம் என்று
நிரூபிக்க ஒரு கூட்டம்!
அதை வெற்றிப்படம் என்று நிரூபிக்க
ஒரு கூட்டம்!
படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே தியேட்டர் ஓனர்களின் எதிர்மறை பேட்டிகள்!
படம் ரிலீஸான இரண்டாம் நாளே படத்தின் வசூலை பாதிக்கும் படியான பல யூடியூப் சேனல்களில் பலரின் கருத்து தெளிப்புகள்,
கேவலமான மீம்ஸ்கள்,
இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல!
சினிமா என்பது ஆலமரம். இதில் நடிகர்கள் என்பவர்கள் விழுதுகள் போன்றுதான். விழுதுகளை பழுது பார்க்கிறேன் என்று மரத்தின் ஆணிவேரையே பழுது பார்க்கிறார்கள்!
முன்பெல்லாம் படம் ஓடுவதற்கான முயற்சிகள் அதிகம் இருக்கும்!
இப்பொழுது ஒரு படம் ஓடுவதை தடுப்பதற்கான முயற்சிகள்தான் அதிகம் இருக்கிறது!
அவரவர் வெற்றிக்கு போராடுவது உன்னதம்!
மற்றவரின் தோல்விக்கு போராடுவது வன்மம்!
வெற்றி, தோல்வியை மக்கள் நிர்ணயிப்பார்கள். இடையில் உள்ளவர்கள் அந்த மாயையை உருவாக்குவது திரைத் தொழிக்கே ஆபத்து. இது பழி வாங்கும் படலாமாக தொடரும் ஆபத்தும் இருக்கிறது!
நியாயமான விமர்சனங்களே
தரமான நிலையை உருவாக்கும்!
தரமான விமர்சனத்திற்கு தலை வணங்குவோம்!
இயக்குனர் பேரரசு