புதிய பல  படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு!!

Share the post

புதிய பல  படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு!!

RC studios சார்பில் 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் R.சந்துரு!!

பல புத்தம் புதிய படைப்புகளுடன் வந்திருக்கும் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான R.சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்கு, இன்னும் பல ஆச்சரியமிக்க படைப்புகளை தரவிருப்பதாக  கூறியுள்ளார்.

வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று  இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக மாறியிருக்கும் அவரது பயணம், வியக்க வைக்கிறது. 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து, கன்னடத் துறையில் சூப்பர் பவர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வளர்ந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவரது உருவாக்கத்தில் வரவிருக்கும் “ஃபாதர்”, “பி ஓ கே”, “ராம பாணசரிதா”, “டாக்” மற்றும் “கப்ஜா 2” போன்ற படங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் பார்வையாளர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர். இந்த படங்களின் பிரமாண்டமான வெளியீடு பற்றிய ஒவ்வொரு தகவல்களும் நிச்சயம் பெரும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

R.சந்துருவின் RC studios உடன் பாலிவுட் ஜாம்பவான் ஆனந்த் பண்டிட் கைகோர்த்துள்ளார் என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. சந்துருவிற்கு கிடைத்து வரும் ஆதரவும், அங்கீகாரமும் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனந்த் பண்டிட் “கப்சா 2” மூலம் கன்னட திரையுலகில் நுழைவது, பெரும் உற்சாகத்தை தருகிறது. அவரது இணைவு இப்படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வரும் என்பது உறுதி. ரசிகர்கள் இவர்களது கூட்டணியை காண ஆவலுடன் உள்ளனர்.

தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் சந்துருவுடன் இணைந்து 5 படங்களைத் தயாரிக்கவுள்ளது,  உண்மையிலேயே திரையுலகிற்கு ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்பமாகும். இவர்களின் இணைவு இந்தியாவைத் தாண்டி பான் வேர்ல்டு வரை விரிவடைவது பாராட்டத்தக்கது. பிரஸ்மீட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதும், ரியல் ஸ்டார் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்கள் கலந்து கொள்வதும், சந்துருவின் பணிகளின் மீது பெரும் நம்பிக்கையையும், நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.  

ராமர் கோவில் திறப்பு விழாவின் போது அறிவிக்கப்பட்ட “ராம }}” திரைப்படம் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. “டாக்” என்ற திரைப்படம், செல்லப்பிராணிகளை விரும்புபவர்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருக்குமெனத் தெரிகிறது, ஆனால் பார்வையாளர்களுக்கு சந்துரு என்ன ஆச்சரியத்தை வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். “கப்ஜா 2” படத்தின் மீது ஏற்கனவே மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஐந்து படங்களையும், RC Studios சார்பில் R.சந்துரு உருவாக்கவுள்ளார். மேலும் இப்படங்கள் பல மொழிகளிலும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *