நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகிறது.
தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி,
ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார்.

எளிய குடும்பத்து தகப்பனுக்கும் மகளுக்கும் இந்த சமூகத்தால் ஏற்படும் ஒரு சம்பவமும், அதை எதிர்கொள்ளும் தகப்பனின் உணர்வுப்பூர்வமான கதைதான் பொம்மை நாயகி.










யோகிபாபு இந்த படத்தில் தனது தனித்தன்மையான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார். கடலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரி 3 ம் தேதி தியேட்டரில் வெளியாகவிருக்கும் படம் யோகிபாபுவின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவு -அதிசயராஜ்,
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு
பாடல்கள் – கபிலன், இளையகம்பன், ஜெயமூர்த்தி, அறிவு ,
ஸ்டண்ட் -ஸ்டன்னர் சாம்.
உடைகள் – ஏகாம்பரம்