இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

Share the post

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது!

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப் படங்கள் அடுத்தக் கட்டத்திற்கு உயர்த்தியது. இப்போது இயக்குநர் தனது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ – The Alchemist’டை அறிவித்துள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ‘ரசவாதி’ படம் மூலம் எஸ்.எஸ். தமன் இணைந்து இசையமைக்கிறார்.

சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்கள். வி.ஜே. சாபு ஜோசப் எடிட்டிங் பணிகளை கவனிக்க, சதீஷ் கிருஷ்ணன் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மற்ற தொழில்நுட்பக் குழுவை சேர்ந்தவர்கள் சிவராஜ் (கலை), சேது (சவுண்ட் எஃபெக்ட்ஸ்), எஸ் பிரேம் (நிர்வாகத் தயாரிப்பாளர்), யுகபாரதி (பாடல் வரிகள்), தபஸ் நாயக் (சவுண்ட் மிக்ஸிங்), எம்.எஸ்.ஜெய சுதா (உரையாடல் பதிவாளர்), ஆக்‌ஷன் பிரகாஷ் (சண்டைப் பயிற்சி), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), ஆனந்த் (Stills), பெருமாள் செல்வம் மற்றும் மினுசித்ராங்கனி. ஜே (ஆடைகள்).

இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் நிச்சயம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ’ரசவாதி’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

DNA Mechanic Company Producer Santhakumar has produced #Rasavathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *