பாரதி மோகன் இயக்கத்தில்”S/o காலிங்கராயன்”
2010 லிருந்து 2021 வரை மேற்கு தொடர்ச்சி மலையின் பழங்குடி மக்களின் விளை நிலங்களை சீரழிந்த காடுகள் என்ற பெயரில் வன உரிமை பற்றி குறிப்பிடாமல் காடு வளர்ப்பு என்ற பெயரில் மத்திய மாநில அரசின் கட்சிகளை சார்ந்த தொழிலதிபருக்கும் சாமியார்களுக்கும் அன்றைய ஆளும்கட்சி பிரமுகர்களின் நிறுவனங்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டன. பாரம்பரியமாக வாழும்மேற்கு தொடர்ச்சி பழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான காட்டு நிலங்கள் ஆன்மீக வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
S/O காலிங்கராயன் படத்தின் மூலம் உழுபவனே முதன்மையானவன் என்று உலகுக்கு சொல்லும் படமாகவும் கருத்தாகவும்தன் தாய்நிலங்களை அபகரித்து ஆதிவாசி பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நின்று போராடும் ஒரு ஜமீன் வாரிசு மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகிய இருவரின் கதையாகும் என்கிறார் இயக்குனர் பாரதிமோகன்.
சன்ஷைன் ஸ்டுடியோஸ் சார்பில் அனந்தகோடி சுப்ரமணியம் தயாரிப்பில் சதீஷ் கண்ணா இணை தயாரிப்பில் பாரதிமோகன் எழுதிஇயக்கி இருக்கிறார். இவர் ராமராஜன் நடித்த ரயிலுக்கு நேரமாச்சு, எடிட்டர் மோகன் தயாரிப்பில் ராம்கி நடித்த தொட்டில் சபதம் மற்றும் சின்னக்காளை ஆகிய படங்களை இயக்கியவர்.
உதய கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க தென்றல்,குஷி,சைலஜா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றொரு கதாநாயகனாக மருது செழியன் நடிக்க குணச்சித்திர வேடத்தில் ஆனந்தபாபு நடிக்கிறார். மீசை ராஜேந்திரன், ஆந்திர வில்லன் அனந்தகோடி சுப்ரமணியம், ஆடிட்டர் பாஸ்கர்,கண்டாங்கி பட்டி ரவி ராஜன்,காஞ்சி சேகர் ஆகியோர் கதையின் முக்கிய பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.
ஒளிப்பதிவு- சந்திரன் சாமி
எடிட்டிங்- சரண் சண்முகம்
ஸ்டண்ட்-சரவெடி சரவணன்,
குட்லக் ஜீவா
நடனம்-ரமேஷ் கமல்
நிர்வாகத் தயாரிப்பு- ஆடிட்டர் பாஸ்கர்
மக்கள் தொடர்பு – வெங்கட்
இணை தயாரிப்பு –
வி.சதீஷ் கண்ணா
தயாரிப்பு-
சன் ஷைன்ஸ் ஸ்டுடியோஸ் – அனந்தகோடி சுப்ரமணியம்
கதை திரைக்கதை
வசனம் பாடல்கள்
இசை இயக்கம் –
பாரதிமோகன்
படத்தில் சண்டை காட்சிகளும் பாடல் காட்சிகளும் மெய்மறக்க செய்கின்றன.
கூவாதோ பாடாதோ கொல்லிமலை குயிலே… என்ற மனதை வருடும் டூயட் பாடலும் நாட்டுக்கோழி காத்திருக்கேன் காட்டுக்குள்ள காமா வாடா…என்ற துள்ளல் இசை பாடலும் படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆனைகட்டி,அட்டப்பாடி, மருதமலை, தொண்டாமுத்தூர், சென்னிமலை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் 41 நாட்களில் இருக்கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி உதயகுமார், பேரரசு, ஆர்.அரவிந்தராஜ், ராஜகுமாரன், டி.கே.ஷண்முகசுந்தரம், எல்.சுரேஷ், வி.வி.கதிர், ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் ஈகை கருணாகரன், செளந்தரபாண்டியன், என்.விஜயமுரளி, தொழிலதிபர் ஆர்.ஆர். தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இப்படம் விரைவில் வெளிவருகின்றது.