க்ரைம் திரில்லர் படமாக “டெக்ஸ்டர்!”

Share the post

க்ரைம் திரில்லர் படமாக “டெக்ஸ்டர்”

தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் வெளி வருகிறது

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனாக பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்று திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் திரில்லருடன்
மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் சூரியன்.G.

ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் S.V தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ள இப்படத்தை சூரியன்.ஜி
இயக்கியுள்ளார்.

ராஜீவ் கோவிந்த் மற்றும் அபிஷேக் ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வில்லன்களாக ஹரிஷ் பெர்டி, நடிக்க அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –
ஆதித்ய கோவிந்தராஜ்

இசை- ஸ்ரீநாத் விஜய்
பாடல்கள்- மோகன்ராஜன்

படத்தொகுப்பு-
ஸ்ரீனிவாஸ் பி.பாபு

சண்டை பயிற்சி- அஷ்ரப் குருக்கள் & கே.டி வெங்கடேஷ்
நடனம் – சினேகா அசோக்

மக்கள் தொடர்பு -வெங்கட்

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்ஸ் –
ஷார்வாக் V.N – ஹர்ஷா .N

கதை – சிவம்
…………………………………………
தயாரிப்பு -பிரகாஷ் S.V
…………………………………………
திரைக்கதை
வசனம் இயக்கம்-
சூரியன்.G
…………………………………………

இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ… என்ற மனதை வருடும் பாடலும்

மிளிரும் பின்னாலி சுழலும் விழிகாரி…எனும் துள்ளலிசை பாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன் படப்பிடிப்பு குடகு மலை,கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது.
நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரியில் வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *