ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா தொலைக்காட்சியில் தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறப்பு காலை மலர் காலை 7:30 மணிக்கு நடிகர் சம்பத் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் .





அதை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு வளையப்பட்டி மலர்வண்ணன் குழுவினரின் இசை சங்கமம் ஜுகல் பந்தி.
மேலும் காலை 9:00 மணிக்கு புலவர் சண்முக வடிவேல் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் மற்றும் 10:30 மணிக்கு கவிஞர் சினேகன் மனைவி கனிகா உடன் தலை தீபாவளி கொண்டாட்டம்.




காலை 11:00 மணிக்கு ரோபோ ஷங்கர் மற்றும் திண்டுக்கல் சரவணன் சேர்ந்து கலாய்க்கும் வித்தியாசமான நிகழ்ச்சி ‘L for Lollu’
மதியம் 12:00 மணிக்கு யூடியூப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் வித்தியாசமான போட்டிகள் நிறைந்த விறு விறுப்பான கேம் ஷோ டிஜிட்டல் சரவெடி .
மதியம் 1:30 மணிக்கு பிரபாஸ் ,ராணா ,தமன்னா,அனுஷ்கா மற்றும் சத்யராஜ் நடிக்கும் பிராம்மணடமான திரைப்படம் பாகுபலி திரையிடப்படுகிறது .
மாலை 5:00 மணிக்கு மதுரை முத்துவுடன் நகைச்சுவை கலைஞர்கள் கலந்து கொண்டு கலாய்க்கும் கலகலப்பான சிரிப்பு மன்றம் .





மாலை 6:00 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த சுவர் ஹிட் நகைச்சுவை திரைப்படம் ‘ரெமோ’
இரவு 10:00 மணிக்கு இளம் இசை நாயகன் லிடியன் நாதஸ்வரம் தன் இசைக்குடும்பத்துடன் பங்கேற்கும் புதுமையான இசை நிகழ்ச்சி ஆகியவை ஒளிபரப்பாகிறது .