ஜெ.துரை
டிடி ரிட்டர்ன்ஸ் திரை விமார்சனம்
நடிகர் சந்தானம் நடித்து எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ்
சுர்பி, ரெடின், மொட்டை இராஜந்திரன், கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
சந்தானமும் அவரது கும்பலும் பேய் அரண்மனைக்குள் தாங்கள் திருடி வைத்திருந்த பணத்தை மீட்டெடுக்க நுழைகின்றனர்
ஆனால் அரண்மனையில் வசிக்கும் பேய்களால் ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்
வின் அல்லது ரன் என்ற ஆபத்தான விளையாட்டை அறிமுகப்படுத்துகிறது அந்த பேய்கள்
போட்டியாளர்கள் தோல்வியடந்தால் கொடூரமாக கொல்லப்படுவார்கள்
ஆவிகளால் ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் சதீஸ்(சந்தானம்) மற்றும் அவரது நண்பர்களும்
இந்த இக்கட்டான சூழலில் சதீஸ் காதலி(சுர்பி)அரண் மனையில் வந்து சிக்கி கொள்கிறார்
தவிக்கும் தனது காதலியை (சுர்பி) காப்பாற்றத் துடிக்கும் சதீஷ் (சந்தானம்)
தனது காதலியுடன் சேர்ந்து வெற்றி பெற்று பேய்களிடமிருந்து தப்பித்தாரா? இல்லையா என்பது தான் படத்தின் கதை
இந்த திகில் காமெடி படம் முதல் பாதியில் காமெடி கதாபாத்திரங்கள் விளையாட்டிற்குள் நுழைந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்
இரண்டாம் பாதி இன்னும் அதிக வேகத்தில் முன்னேறி செல்கிறது கேம், வின் அல்லது ரன், என்று நகைச்சுவைகளை அள்ளி வீசுகிறது டிடி ரிட்டான்ஸ்
சந்தானம் இந்த படத்தில் அவரது கம்பீரமான அதிக முயற்சி இல்லாமல் ஸ்கோர் செய்கிறார்
சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராவத், முனிஷ்காந்த் மற்றும் மொட்டா ராஜேந்திரன், மற்ற நடிகர்கள் தங்கள் கதா பாத்திரங்களுக்கேற்றார் போல படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்
படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக உள்ளது
மொத்தத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை குட்டியோட படம் பார்த்து மகிழ்ந்த திருப்தி நிச்சயமாக இருக்கும்