டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிக்கள்ஸ் பேட்டரி எலெக்ட்ரிக்கை அமைத்து களமிறங்குகிறது; கார்பனை குறைக்கும் போக்குவரத்து தீர்வுகளுக்காக நீண்டகால தயார்நிலைக்கான உத்தியை அறிவிக்கிறது !!

Share the post

டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிக்கள்ஸ் பேட்டரி எலெக்ட்ரிக்கை அமைத்து களமிறங்குகிறது; கார்பனை குறைக்கும் போக்குவரத்து தீர்வுகளுக்காக நீண்டகால தயார்நிலைக்கான உத்தியை அறிவிக்கிறது


முழுமையான-எலக்ட்ரிக், நெக்ஸ்ட் ஜெனரேஷன் இகேன்டெர் உடன் பேட்டரி எலெக்ட்ரிக் சந்தையில் நுழைகிறது.
இந்தியச் சந்தையில் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் முழுமையான எலெக்ட்ரிக் இகேன்டெரின் அறிமுகம்.
எதிர்கால தயாரிப்புகளில் சிஓ2-நடுநிலை உந்துவிசைக்கான நீண்டகால தயார்நிலை உத்தியை அமைக்கிறது.
டீசல் ஐசிஇ மற்றும் சிஓ2-நடுநிலை உந்துவிசை ஆகியவை எதிர்காலத்தில் இணைந்து இருக்கும்.
சென்னை – டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிக்கள்ஸ் (டிஐசிவி), டெய்ம்லர் டிரக் ஏஜி (“டெய்ம்லர் டிரக்”)-இன் முழு உரிமையுடைய துணை நிறுவனமான முழுமையான எலெக்ட்ரிக், நெக்ஸ்ட் ஜெனரேஷன் இகேன்டெர் உடன் இந்திய பேட்டரி எலெக்ட்ரிக் சந்தையில் தனது நுழைவை அறிவித்தது. இந்தியாவில் முழுமையான-எலக்ட்ரிக் இகேன்டெரின் சந்தை அறிமுகமானது, நீண்டகாலத்திற்கு அதன் முழுத் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவையும் கார்பனைக் குறைப்பதற்கான அதன் பெரும் தொலைநோக்காகும், இந்த அறிமுகம் இந்நிறுவனத்தின் முதல் படிக்கான எடுத்துக்காட்டாகும். இந்தியாவின் இலகுரக டிரக் பிரிவில் டிஐசிவியின் நுழைவைக் குறிக்கும் முழுமையான-எலெக்ட்ரிக் இகேன்டர், அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
உலகளாவிய கண்ணோட்டத்தில், பாரிஸ் காலநிலை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நிறைவேற்றத்திற்கு டெய்ம்லர் டிரக் முழுமையாக உறுதிகொண்டுள்ளது. நவீன போக்குவரத்தின் முன்னோடியான இது, சிஓ2-நடுநிலை போக்குவரத்தை உலகளாவிய வெற்றியாக மாற்ற விரும்புகிறது மேலும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பங்களிக்க விரும்புகிறது. போக்குவரத்துத் தொழில்துறையில் கார்பனைக் குறைக்க, வளங்கள் நுகர்வைக் குறைப்பதற்கான தெளிவான பார்வையுடன், டெய்ம்லர் டிரக் தனது புதிய டிரக்குகள், பேருந்துகள் ஆகியவற்றை 2039ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா, ஜப்பான், யுஎஸ்ஏ ஆகியவற்றில் சிஓ2-நடுநிலையாகவும், 2050ஆம் ஆண்டளவில் உலகளவில் சிஓ2-நடுநிலையாகவும் இருக்க பாடுபட்டு வருகிறது. டெய்ம்லர் டிரக்கின் உலகளாவிய கார்பனைக் குறைக்கும் தொலைநோக்கு மற்றும் மேற்கூறிய முக்கியச் சந்தைகளைத் தொடர்ந்து இந்தியாவிற்கான ஒட்டுமொத்த இலக்குக்கு ஏற்ப சிஓ2-நடுநிலை புராடக்ட் போர்ட்ஃபோலியோவின் தயார்நிலையில் டிஐசிவி செயல்படுகிறது.
டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெகிக்கள்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ திரு. சத்யகம் ஆர்யா அவர்கள் இவ்வாறு கூறினார், “எங்கள் அனைத்து முயற்சிகளும் நீண்டகாலத்திற்கு சிஓ2-நடுநிலை உந்துவிசை தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் எங்கள் எதிர்கால தயாரிப்புகளுக்கு வலுவான தயார்நிலையை அடைவதில் உள்ளன. அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் இந்தியாவில் முழுமையான எலெக்ட்ரிக் இகேன்டர் அறிமுகம், எங்கள் முழு புராடக்ட் போர்ட்ஃபோலியோவையும் கார்பனை குறைப்பதற்கான நீண்டகால உத்தியின் முதல் படியாகும். இருப்பினும், டீசல் ஐசிஇ மற்றும் சிஓ2-நடுநிலை உந்துவிசை தொழில்நுட்பங்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய எதிர்காலத்தில் இந்தியச் சந்தையில் இணைந்து செயல்படும் என்பதே உண்மை. எங்களைப் போன்ற ஒரு நீண்டகாலத் திட்டம் பல சிக்கலான வெளிப்புறக் காரணிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில, சார்ஜ் மற்றும் எரிபொருள் நிரப்பும் உள்கட்டமைப்பு, பசுமை ஆற்றல் கிடைத்தல், செலவு சமநிலை, பரந்த அளவிலான வாடிக்கையாளர் இதனை ஏற்றுக்கொள்ளுதல். எனவே, இகேன்டர் உடனான எங்கள் ஆரம்ப கவனம் வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்ளுதலுடன் புராடக்ட், தலைசிறந்த சேவையை அடைவதாகும். அடுத்த இரண்டு தசாப்தங்களில், கார்பன் குறைக்கப்பட்ட போக்குவரத்து தீர்வுகளுடன் உறுதியான நிலைப்பாட்டை எடுப்போம், மேலும் இந்தியாவில் நீடித்த போக்குவரத்தில் முன்னணியில் இருப்பதற்கான முன்னேற்றத்தை நாங்கள் செய்வோம்.”
பல ஆண்டுகளாக இந்தியச் சந்தை எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதை டிஐசிவி கூர்ந்து கவனித்து வருகிறது. இந்நிறுவனத்தின் சிஓ2-நடுநிலை உந்துவிசை தொழில்நுட்பச் செயல்திட்டம் டெய்ம்லர் டிரக்கின் உலகளாவிய தொழில்நுட்ப உத்திக்கு ஏற்ப பேட்டரி எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் அடிப்படையிலான டிரைவ் தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. டிஐசிவி ஏற்கனவே பாரத்பென்ஸ் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கான்செப்ட் கோச்சினை ஒரு பெரிய இந்திய நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில், டிஐசிவி பல்வேறு பயன்பாட்டுப் பிரிவுகளில் டிரக்குகளை அறிமுகப்படுத்தும், அவை நீண்ட தூரம், சுரங்கம், கட்டுமானம், பிஓஎல், டம்பர், ஆர்எம்சி, பல சரக்கு மற்றும் நிலப்பகுதி தேவைகளுக்கு ஏற்ப சேவை செய்யும்.
“எல்என்ஜி பயன்படுத்தினால், நீண்டதூர போக்குவரத்திற்கு இடைக்கால, உத்திசார்ந்த தீர்வாக இருக்கும். எங்கள் எதிர்கால புராடக்ட் போர்ட்ஃபோலியோ முழுவதும் பேட்டரி-எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் அடிப்படையிலான உந்துவிசை தொழில்நுட்பங்களை நாங்கள் முதன்மையாக கட்டம் கட்டமாக உறுதி செய்வோம். மார்க்கெட் இருக்கும்போது சரியான வாகனங்களுடன் நாங்கள் தயாராக இருப்போம் என்பது மட்டும் நிச்சயம்” என்றார் திரு.ஆர்யா.
இந்தியாவிற்கான அனைத்து எலெக்ட்ரிக் இகேன்டர் மேம்பட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. பேட்டரி எலக்ட்ரிக் பிளாட்ஃபார்ம் ஜப்பானில் உருவானது, அங்கு முதல் தலைமுறை இகேன்டரின் தொடர் உற்பத்தி 2017-இல் தொடங்கியது. அனைத்து புதிய, நெக்ஸ்ட் ஜெனரேஷன் இகேன்டர் 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜப்பான், ஐரோப்பா ஆகியவற்றில் அதன் உலக அரங்கேற்றத்தை நடத்தியது. 2017-இல் முதல் தலைமுறை தொடங்கப்பட்டதில் இருந்து, இகேன்டர் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கில் விற்பனையானது. நிரூபிக்கப்பட்ட, நெக்ஸ்ட் ஜெனரேஷன் இகேன்டர் ஆனது 100 வேரியன்ட்டுகளுடன் உலகெங்கிலும் உள்ள முக்கியச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டிருக்கும்.
இந்தியாவின் சிஓ2-நடுநிலை உந்துவிசை தொழில்நுட்பச் சந்தை இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது, எனவே, நீண்டகாலத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இந்தியா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான உலகப் புகழ்பெற்ற தளமாகவும் உள்ளது, மேலும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் புராடக்ட் மேம்பாட்டிற்கான மையமாக தொடர்ந்து வளரும். இருப்பினும், முன்னோக்கி செல்லும் உலகத்துடன் போட்டியிட இந்தியாவுக்கு சாதகமான, வலுவான கொள்கைகள் மற்றும் சந்தை சூழல் தேவை

.

வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு உகந்த கொள்கை கட்டமைப்பானது எவ்வாறு முக்கியமானது என்பது குறித்து திரு. ஆர்யா மேலும் கூறினார், “உரிமையின் மொத்தச் செலவின் சமன்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நுகர்வோர் பரவலாக ஏற்றுக்கொண்டால், சிஓ2-நடுநிலை வாகனங்களை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வது சாத்தியமாகும். நீடித்த நகர்திறன் தீர்வுகளில் வெற்றியை அடைவதில் முக்கியமான காரணிகளின் செல்வாக்கை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிஓ2-நடுநிலை உந்துவிசை தொழில்நுட்பங்களுக்குள் நுழைவதன் மூலம், உலகின் முதல் ஐந்து வணிக வாகன சந்தைகளில் ஒன்றாக முன்னேறி வரும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு பங்களித்தல் டிஐசிவியின் நோக்கமாகும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *