டீமான் திரை விமர்சனம்*

விண்டோ பாய்ஸ் பிக்சர்
ஆர். சோமசுந்தரம் தயாரித்து ,ரமேஷ் பழனிவேல்
இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் டீமான் .ப
சச்சின், அபர்நதி, கும்கி அஸ்வின், சுருதி பெரியசாமி, கேபிஒய் பிரபாகரன், ரவீனா தாஹா, நவ்யா சுஜி, நவ்யா தரணி, அபிஷேக் மற்றும்பலர் நடித்திருக்கிறார்கள்.
நாயகனுக்கு ,திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
திகில் கதை திரைப்படமாக இயக்குகிறார் . திரைப்படம் இயக்க வாய்ப்பு கிடைத்தவுடன்
தனிமையில் இருக்க விரும்பி ஒரு 2bhk அப்பார்ட்மெண்டில் குடியேறுகிறார் .அப்பார்ட்மெண்டுக்கு சென்றவுடன், இரவில் தூக்கத்தில் அமானுஷ்யமான கனவுகள் வர ஆரம்பிக்கிறது. இதனால் தூக்கம் இல்லாமல்,
மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்.
மருத்துவர் இடம் சென்று சிகிச்சை எடுக்கிறார் . ஆனாலும் தூக்கத்தில் தொடர்ந்து அமானுஷ்யமான கனவுகள் வர அப்பார்ட்மெண்ட்டை விட்டு ஓடி விடுகிறார்.
தனக்கு கனவுகள் வருவதின் பின்னணியை தெரிந்து கொள்ள மீண்டும் அப்பார்ட்மெண்டிற்கு செல்கிறார். அப்போது நாயகனுக்கு உண்மைகள் தெரிய வருகிறது.
நாயகன் அப்பார்ட்மெண்டில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
சச்சின், அபர்நதி, கும்கி அஸ்வின், சுருதி பெரியசாமி, கேபிஒய் பிரபாகரன், ரவீனா தாஹா, நவ்யா சுஜி, நவ்யா தரணி, அபிஷேக் அனைவரின் நடிப்பும் சிறப்பு.
ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவு அருமை.
ரோணி ரபேலின் இசையில் பாடல்கள் சிறப்பாக உள்ளது.
இயக்குனர் ரமேஷ் பழனிவேல் வழக்கமான திகில் படங்களின் பாணியில் இல்லாமல் வித்தியாசமாகா சொல்லி இருக்கிறார்.
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் ஒரு வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
பேய் மற்றும் ஆவி இவற்றின் பழிவாங்கல் இல்லாமல், அமானுஷ்யங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் மூலம் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி ஒரு புதுவிதமான முறையில் படத்தை இயக்கி இருக்கிறார்.
மொத்தத்தில்
*புது முயற்சி*