“கட்டில்”திரை விமர்சனம் !!

Share the post

“கட்டில்”திரை விமர்சனம் !!

ஹீரோ
இ.வி.கணேஷ்பாபு கணேசன் கதாபாத்திரம் தொடங்கி
மூன்று தலைமுறை கதாபாத்திரத்தில்
அப்பா இளங்கோவனாக
தாத்தா அய்யாறு வாக நடித்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே தனலெட்சுமியாக

கீதா கைலாசம் சரஷ்வதியாக
விதார்த் சுரேஷ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில்
அன்னம் அரசு செல்வியாக
இந்திரா செளந்திரராஜன் ராமையாவாக
நடித்துள்ளனர்

மூன்று தலைமுறையாக வசித்து வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் காசு பணத்தைக் கொண்டு, வியாபாரம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள். வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நாயகனின் அண்ணன்கள் மற்றும் அக்காகள். நாயகன்  தாய்,  மனைவி மகனோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார்.  அவன் மனைவியும், தாயும் அந்த வீட்டை விற்கும் முயற்சியை கைவிடச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகும்பட்சத்தில், தங்கள் பரம்பரையில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்து தவழ்ந்த பூர்விக 250 ஆண்டுகளாக இருந்தக் கட்டிலையாவது காப்பாற்ற முனைகிறார்கள். அதை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே கட்டிலின்  கதை …
வீட்டை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்துவிடுகிறது. கட்டிலையாவது காப்பாற்றுவோம் என்று களத்தில் இறங்குகிறார்கள். வீட்டை வாங்க இருக்கும் முதலாளி கட்டிலுக்கும் பெரும் தொகை கொடுக்கிறேன். எனக்கே விற்றுவிடுங்கள் என்று ஆசை காட்டுகிறான். நாயகனின் சகோதர சகோதரிகள் யோசிக்க, நாயகனுக்கு   பிறகு ஒரு சிக்கல் புதிதாக வருகிறது. அது என்ன சிக்கல் வீட்டை காலி செய்ய க்கட்டாயம் வருகிறது. 
கையில் 75 இலட்சம் ரூபாய்கான செக் இருக்கிறது. இவனோ சொந்த வீடு வாங்கப் போகிறான். நான் ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த கையோடு வீடு காலி செய்ய வேண்டும் என்றால், என் பங்கு பணம் எனக்கு முதலிலேயே கொடுத்து விட வேண்டும். அதில் தான் நான் வீடு வாங்க வேண்டும், அப்படி கொடுக்க விருப்பமில்லை என்றால் என்னால் கையெழுத்துப் போட முடியாது என்று சொன்னால் கண்டிப்பாக அவனுக்கான பணத்தைக் கொடுக்கத்தான் போகிறார்கள், கட்டில் வைப்பது போல் வீடு கிடைக்க போகவதில்லை என்று அலைந்து கொண்டே இருப்பதும்   அவர்கள் வேலையாக இருக்கும் .
சிறுவயது விதார்த் ஆக வரும் சிறுவன் நிதிஷ் அந்தக்  கட்டிலை தேடிப் போய் அதன் மீது ஏறி படுத்துக் கொண்டு தூங்கும் காட்சியில்  அந்த உணர்ச்சிக்கு உயிர் கொடுக்கிறது.
செம்மலர் அன்னமும், சிருஷ்டியும் நிறைமாத கர்ப்பிணிகளாக ஒரே ஆட்டோவில் பயணிக்கும் இடத்தில் இருந்து அவர்கள் படும் துயரைக் கண்டு நம்மை இயல்பாக உருக வைக்குகிறது இ.வி.கணேஷ்பாபு மூன்று வெவ்வேறுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.  சிறுவன் யுதீஷின் அப்பாவாக வரும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மனைவியாக வரும் சிருஷ்டி டாங்கேவிற்கு க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம் கண்ணை கலங்கச் செய்கிறார்.  செம்மலர் அன்னம் சிறிய நேரம் வந்தாலும் தன் சீரிய நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.  விதார்த் குணச்சித்திர கதாபாத்திரத்தில் வந்து தன்னுடைய  குடும்பக் கதையை சொல்லும் விதம்  கதையின் விபரங்களை  உச்சத்துக்கு  கொண்டு போகிறது.
இந்திரா செளந்தர்ராஜன், ஒவியர் சியாம்,,  சம்பத்ராம்,,சிறப்பா நடித்திருக்கிறார்கள்.  பாட்டியாக வரும் கீதா கைலாசம் தன் கணவனோடு வாழ்ந்த வீட்டையும்  அந்தப் பரம்பரைக் கட்டிலையும் பிரியும் தவிப்பை கண்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் நம் உள்ளத்துக்குள்  கொண்டு போகிறார்.
வைட் ஆங்கிள் ரவியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கனகச்சிதம். ஒளியையும் காட்சி சட்டகங்களையும் கதைக்கான புரிதலோடு கையாண்டிப்பது கண்கூடாகத் தெரிகிறது.  ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அந்த  க்ளைமாக்ஸ் காட்சிகளில் பின்னணி இசை அந்த வீட்டிற்கே நம்மை கூட்டிச் செல்கிறது.
தேசிய விருது பெற்ற எடிட்டர் லெனின் இப்படத்திற்கு எடிட்டிங், கதை திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதி இருக்கிறார்.  இயக்கத்தை  இ.வி.கணேஷ்பாபு செய்திருக்கிறார்.
“கட்டில்”  பார்வைக்கும் பாரம்பரியம் மற்றும் பூர்வீகம் நிறைந்த  படைப்பாக தெரிகிறது.

தொழில்நுட்ப வல்லுநர்கள்


ஸ்ரீகாந்த் தேவா வின் இசையும்கவிப்பேரசு வைரமுத்துபாடல் வரிகள்லும்
சித் ஸ்ரீராம் பாடல்லும் படத்துக்கு வண்ணம் பூசிருக்கு !
பி.லெனின் அருமை

பி.கிருஷ்ணமூர்த்தி, கலை சிறப்பு !

மொத்தத்தில்

*கட்டில்’ உயிரோட்டம்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *