அரசு அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கால அவகாசம் முடிந்தும் சீல் வைக்க கோரி சட்ட உதவி சங்கம் சார்பாக புகார் மனு:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிக்குட்பட்ட
பஜார் 3வது தெருவில் கவராம் என்பவரது மகன் G. ராஜி என்பவர் அரசு அனுமதி இன்றி 3 மாடி அடுக்குமாடி கட்டிடம் கட்டியுள்ளார்.
இந்தக் கட்டிடம் ஆனது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் அதை உடனே விரைந்து அகற்ற வேண்டும் என்றும் சட்ட உதவி சங்கத்தின் நிறுவன தலைவர் A.P. ராஜா தலைமையில் பொதுமக்கள் கோரிக்கையாக புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த புகாருக்கு நகராட்சி அதிகாரிகள் தாமதப்படுத்தியதால் சட்ட உதவி அமைப்பினர் பொதுமக்களுடன் சேர்ந்து சாலை மறியல் செய்ய போவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் மூலம் தகவல் அனுப்பி உள்ளனர் உடனே நகராட்சி அதிகாரிகள் கடந்த 20.1.23ம் தேதியன்று அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர் .

மீண்டும் நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் உள்ள சீலை 08.02.23ம் தேதியன்று அகற்றினார்கள் ஏன் சீலை அகற்றினீர்கள் என்று நகராட்சி அதிகாரிகளிடம் 06.3.23ம் தேதியன்று சட்ட உதவி சங்க அமைப்பினர் நேரில் சென்று கேள்வி எழுப்பியதற்கு G. ராஜு என்பவர் அரசு ஆணை முதன்மை செயலாளரிடம் தனது பொருட்களை எடுக்க 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று அனுமதி வாங்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மீண்டும் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கக் கோரி நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் சார்பாக A.P ராஜா தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து
சட்ட உதவி சங்க நிறுவனத் தலைவர் A.P. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்:
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அரசு அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 10 நாட்கள் கால அவகாசம் முடிந்து 1 மாத காலம் ஆகியும் இன்னும் அந்தக் கட்டிடம் இன்னும் சீல் வைக்கப்படவில்லை மீண்டும் இன்று எனது தலைமையில் பொதுமக்கள் மற்றும் எங்களது அமைப்பினர் சேர்ந்து நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம் இனிமேலும் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கவில்லை என்றால் ஆவடி நகராட்சியை பொதுமக்களுடன் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்த போகின்றோம் என்று கூறினார்.