தமிழ் திரைப்படத்தின் பிரபலங்கள் குஷ்பூ மற்றும் பிருந்தா மாஸ்டரை டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சியில் நடுவர்களாக கொண்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி



~ இருவரும் பங்கேற்ற ஒரு புதிய புரோமோவை வெளியிட்டது; இது அதன் முதன்மையான நடன ரியாலிட்டி ஷோவின் புத்துணர்ச்சியூட்டும்
புதிய சீசனுக்கான ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது.


சென்னை, ஆகஸ்ட் 10, 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிடான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2நிகழ்ச்சியின்மூலம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் புகழ்பெற்ற நடிகை குஷ்பூவை நடுவராக மீண்டும் கொண்டு வருகிறது. இதற்கான புதிய புரோமோவையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புரோமோவில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுடன் நடிகை குஷ்புமற்றும் இந்நிகழ்ச்சியின் சீசன் 1 நடுவரான பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டரும் இடம் பெற்றுள்ளார். இந்த சீசனிலும் அவர் நடுவர் இருக்கிறார்.

புத்துணர்ச்சியூட்டும் வகையில் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ள இந்த சீசன் 2 புரோமோவில் பார்வையாளர்களை தங்களின் வசீகரம் மற்றும் அழகால் கவர்ந்திழுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பேசி உள்ளனர். மேலும் வரவிருக்கும் சீசன் இதுவரை பார்த்திராத போட்டியை உறுதிசெய்வதோடுபார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்நிகழ்ச்சி இருக்கும் என்று இந்த புரோமோவில் நடுவர்கள் உறுதி அளிக்கின்றனர்.


இந்த புதிய புரோமோ குறித்து நடிகை குஷ்பூ கூறுகையில், நடனம் என்பது ஒரு கலை, அது எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. நடனத்தின் மீது எனக்கு அதிக ஈடுபாடு உள்ளது. டான்ஸ் வெசர்ஸ்டான்சின் முதல் சீசனை நான் பார்த்தேன், இது மிகவும் அற்புதமானது.பிருந்தா என் பக்கத்தில் இருப்பது கேக் மீது ஒரு செர்ரி பழத்தை வைப்பது போன்றதாகும். எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனக்கு இரட்டை மகிழ்ச்சி. மேலும், எப்போதும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் முற்போக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சியுடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.அவை தடைகளை உடைத்து புதிய அளவுகோல்களை அமைக்கும். தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வேகமாக வளர்ந்து வருவதை நான் கண்கூடாக பார்க்கிறேன், அவர்கள் இணையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று என்னால் கூற முடியும் என்று தெரிவித்தார்.


இது குறித்து நடிகரும்,பிரபல நடன இயக்குனரும் மற்றும் டிவிடி சீசன் 1 நடுவருமானபிருந்தா மாஸ்டர்தனது உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கூறுகையில், நான் சீசன் 1 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தேன், அதில் பிரம்மாண்டத்திற்கு குறைவே இல்லை.சீசன் 2 இன்னும் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது.மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்பும் போட்டியாளர்களை சந்திக்க நான் உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் தற்போது ஒளிபரப்பாக உள்ள சீசன் 2 முற்றிலும் புதியது மற்றும் முந்தைய சீசனில் இருந்துமுற்றிலும் மாறுபட்டது. இதுதவிர, ஒரு சிறந்த நண்பரான குஷ்பூவுடன் நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.
https://www.instagram.com/p/CSTlGqpJ_oq/?utm_medium=copy_link
https://twitter.com/colorstvtamil/status/1424279216745598976?s=24
அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் டிடிஎச் தளங்களில் கிடைக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின்பிற அற்புதமான நிகழ்ச்சிகளை காணத் தவறாதீர்கள் – சன் டைரக்ட் (சேனல் எண்.128), டாடா ஸ்கை (சேனல் எண்.1515), ஏர்டெல் (சேனல் எண்.763), டிஷ் டிவி (சேனல் எண்.1808) மற்றும் வீடியோகான் டி2எச் (சேனல் எண்.553). பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் ‘வூட்’டில் பார்த்து ரசிக்கலாம்.