உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட
ஆர்யா நடித்த ‘கடம்பன்’ திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்
————
பவர்ட் பை (Powered by) ஜில்லெட் கார்டு 3 மற்றும் ஸ்பெஷல் பார்ட்னர் (Special Partner) நிப்பான் பெயிண்ட் வழங்கும் இத்திரைப்படம் வரும் ஞாயிறு 27-ந்தேதி அன்று மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது
———–
சென்னை| ஜூன் 25, 2021 : தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த, அதிரடி திரைப்படமான ‘கடம்பன்’ திரைப்படத்தை சன்டே சினி ஜம்போ’வில் ஒளிபரப்ப உள்ளது. மூவி ஆப் தி மந்த் (Movie of the month) கலெக்ஸனில், வரும் ஞாயிற்றுக்கிழமை 27-ந்தேதி அன்று மதியம் 1 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாகும் இந்த திரைப்படத்தை சிறப்பு ஸ்பான்சர்களான ஜில்லெட் கார்டு 3 – நிப்பான் பெயிண்ட் ஆகியவை இணைந்து வழங்கவிருக்கின்றன.

இயக்குனர் ராகவன் இயக்கியுள்ள இத்திரைப்படம் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டதாகும். இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, தீப்ராஜ் ரானா, ஆடுகளம் முருகதாஸ், மசூதன் ராவ் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு புகழ்பெற்ற இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவையாகும்.

‘கடம்பன்’ திரைப்படம் தமிழ்நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மனதை மயக்கும் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய சிமெண்ட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஏராளமான சுண்ணாம்புக்கற்கள் மீது ஆசைப்பட்டு அதை வெட்டி எடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கும் அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களைச் சேர்ந்த கடம்பனுக்கும் (ஆர்யா) இடையே பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களிடம் இருந்து காட்டைக் காப்பாற்ற கடம்பன் எவ்வாறு போராடுகிறான் என்பதே இந்த படத்தின் கதையாகும்.
மேலும் இந்த திரைப்படத்தில் வாழ்விடத்தை காப்பாற்ற போராடும் கடம்பனுக்கும் ரதிக்கும் (கேத்தரின் தெரெசா) இடையிலான காதலையும் இயக்குனர் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். இது மிகுந்த பொழுதுபோக்கு, காதல் மற்றும் அதிரடி சாகசங்கள் நிறைந்த திரைப்படம் ஆகும். 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் மதியம் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்து அன்றைய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
இணைப்பு : https://fb.watch/6ldPvjHIw9/