புரோமேக்ஸ் இந்தியா பிராந்திய 2021 மாநாட்டில் 6 விருதுகளை வென்ற கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ரியாலிட்டி ஷோவான ‘கோடீஸ்வரி’4 விருதுகளை தட்டிச் சென்றது
சென்னை, ஜூன் 15, 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி புரோமேக்ஸ் இந்தியா பிராந்திய 2021 (Promx India Regional 2021) மாநாட்டின் முதல் பதிப்பில் 6 விருதுகள் வென்று அசத்தியுள்ளது. 25பிரிவுகளில் போட்டியிட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு, சிறந்த நிகழ்ச்சிக்கான பிரச்சாரம், சம்திங் ஃபார் நத்திங், சிறந்த பொழுதுபோக்கு விளம்பரம் மற்றும் சிறந்த வெளியீட்டு பிரச்சாரம் ஆகிய 4 பிரிவுகளில் தங்கப் பதக்கமும், திரைப்படத்திற்கான சிறந்த விளம்பரம் மற்றும் அதன் புதுமையான படைப்புகள் மற்றும் விளம்பரங்களுக்கான சிறந்த இயக்க பிரிவில் 2 வெள்ளிப் பதக்கமும் கிடைத்துள்ளது.
இந்தியில் ஒளிபரப்பாகும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பாக ஆசியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கென பிரத்யேகமாக, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கப்பட்ட கோடீஸ்வரி – ‘ஹு வான்ட்ஸ் டூ பி ஏ மில்லியனர்’ என்னும் நிகழ்ச்சி அதன் அற்புதமான இயக்கம் மற்றும் புதுமையான பிரச்சாரத்திற்காக 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றது மட்டுமின்றி சிறந்த கருப்பொருள் பிரச்சார பிரிவில் இறுதிப் போட்டியாளர்களில் பட்டியலிலும் இடம்பெற்றது.
மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சுதந்திர தின நிகழ்ச்சிக்காக ஒளிபரப்பிய விளம்பரமத்திற்கு தங்கமும் வாட்ச்மேன் படத்திற்கான சிறந்த திரைப்பட விளம்பரத்திற்காக வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சிறந்த விளம்பரப் பிரிவின் இறுதிப் பட்டியலிலும் கலர்ஸ் தமிழ் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்த விருது கிடைத்தது குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் திரு அனுப் சந்திரசேகரன் பேசுகையில், மதிப்புமிக்க புரோமேக்ஸ் விருதுகளை நாங்கள் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்களை மகிழ்விக்கும் வகையில் பலவித புதுமையான நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தன்னை வேறுபடுத்தி வருகிறது. கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல் ஆகும். பெண்களின் சிறிய கனவுகள் மற்றும் ஆசைகளுக்கு சிறகுகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்க நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த முயற்சிக்கு தற்போது எங்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி லட்சக்கணக்கான பார்வையாளர்களின் இதயங்களை வென்று இருந்த நிலையில் தற்போது புகழ்பெற்ற புரோமேக்சின் நடுவர்களின் இதயங்களை வென்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்து விருதானது இதுபோன்ற தனித்துவமான மற்றும் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்க எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய அனைவரையும் நான் இத்தருணத்தில் பாராட்டுகிறேன். இதுபோன்ற விருதுகள் நாம் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு செல்லவதற்கான உந்து சக்தியாக இருக்கும். இந்த விருது நிச்சயம் நம் அனைவருக்கும் உற்சாகமான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தனித்துவமான மற்றும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவே இருந்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத தொற்றுநோய் காலத்தில் பல சவால்கள் இருந்தபோதிலும், பொழுதுபோக்கு நிறைந்த மகாசங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அதன் பார்வையாளர்களுக்காக வழங்கி அவர்களை கலர்ஸ் தமிழ் மிகுந்த உற்சாகப்படுத்தி வருகிறது.
மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ‘அபி டெய்லர்’ என்னும் தொடருக்கான விளம்பர படத்தை வெளியிட்டது. இதை 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர். மேலும் புனைக்கதை பிரிவில் இன்னும் சில புதிய நிகழ்ச்சிகளையும், டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2 போன்ற புதுமையான நிகழ்ச்சிகளையும் விரைவில் ஒளிபரப்ப உள்ளது என்று தெரிவித்தார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த விருதுகள் குறித்த விவரம் வருமாறு:-
1. சிறந்த நிகழ்ச்சிக்கான பிரச்சாரம்
தங்கம்
கோடீஸ்வரி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
சுதர்சன் சீனிவாசன் – கருத்தாக்கம் மற்றும் இயக்கம்
அருண் பத்மநாபன் – ஒளிப்பதிவு
ஆறுமுகம் வீரபத்திரன் – எடிட்டர்
சித்து – இசை
2. சம்திங் பார் நத்திங்
தங்கம்
சுதந்திர தின விளம்பரம்
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
சுதர்சன் சீனிவாசன் – கருத்தாக்கம் மற்றும் இயக்கம்
அருண் பத்மநாபன் – ஒளிப்பதிவு
ஆறுமுகம் வீரபத்திரன் – எடிட்டர்
சித்து – இசை
3. சிறந்த பொழுதுபோக்கு விளம்பரம்
தங்கம்
கோடீஸ்வரி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
சுதர்சன் சீனிவாசன் – கருத்தாக்கம் மற்றும் இயக்கம்
அருண் பத்மநாபன் – ஒளிப்பதிவு
ஆறுமுகம் வீரபத்திரன் – எடிட்டர்
சித்து – இசை
4. சிறந்த வெளியீட்டு பிரச்சாரம்
தங்கம்
கோடீஸ்வரி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
சுதர்சன் சீனிவாசன் – கருத்தாக்கம் மற்றும் இயக்கம்
அருண் பத்மநாபன் – ஒளிப்பதிவு
ஆறுமுகம் வீரபத்திரன் – எடிட்டர்
சித்து – இசை
5. படத்திற்கான சிறந்த விளம்பரம்
வெள்ளி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
ஆறுமுகம் வீரபத்திரன் – எடிட்டர்
தென்னரசு – விளம்பர தயாரிப்பாளர்
சுதர்சன் சீனிவாசன் – கருத்தாக்கம்
6. சிறந்த இயக்கம்
வெள்ளி
கோடீஸ்வரி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
சுதர்சன் சீனிவாசன் – கருத்தாக்கம் மற்றும் இயக்கம்
அருண் பத்மநாபன் – ஒளிப்பதிவு
ஆறுமுகம் வீரபத்திரன் – எடிட்டர்
சித்து – இசை
7. சிறந்த கருத்தாக்க பிரச்சாரம்.
இறுதி தேர்வு
கோடீஸ்வரி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18
8. குழந்தைகளுக்கான சிறந்த விளம்பரம்
இறுதி தேர்வு
ஹாலிவுட் கிட்ஸ் மூவி
கலர்ஸ் தமிழ் – வையாகாம் 18