உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ‘டிராஃபிக் ராமசாமி’ திரைப்படத்தை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழி
~சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக “எல்லாமே என் ராசாதான்” என்ற வெற்றித் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது~
~சிறப்பான இத்திரைப்படங்களை கண்டு ரசிக்க ஜுலை 4, இந்த ஞாயிறன்று பிற்பகல் 1.00 மற்றும் 4:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள்~
சென்னை: 2 ஜுலை 2021: தமிழ்நாட்டின் இளைய பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், ஒவ்வொரு வாரஇறுதி நாட்களிலும் சிறப்பான திரைப்படங்களை ஒளிபரப்பி, திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில், இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ. சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்த டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலகளவில் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மூலம் இந்த மகிழ்ச்சியை இன்னும் உயர எடுத்துச் செல்லவிருக்கிறது.

அற்புதமான இந்த நிஜவாழ்க்கைக் கதை திரைப்படத்தோடு சேர்த்து நடிகர் ராஜ்கிரண் நடித்திருக்கும் சிறப்பான பொழுதுபோக்குப் படமான எல்லாமே என் ராசாதான் என்பதும் சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக வரும் ஞாயிறன்று ஒளிபரப்பாகிறது. இந்த இரு அதிரடி ஹிட் திரைப்படங்களை கண்டு மகிழ, ஜுலை 4 ஞாயிறு பிற்பகல் 1:00 மற்றும் 4:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையைப் பாருங்கள்.
சமூக செயற்பாட்டாளராக தமிழகத்தில் வாழ்ந்து, சமீபத்தில் மறைந்த திரு. டிராஃபிக் ராமசாமி என்பவரது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமே டிராஃபிக் ராமசாமி. சமூக நலனுக்கான செயல்பாட்டில் உத்வேகமளிக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பிரபல நடிகர்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரோகிணி, லிவிங்ஸ்டன், அம்பிகா, விஜய் ஆண்டனி, குஷ்பு சுந்தர், சீமான் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நடிப்பில், விக்கி இயக்கியிருக்கிறார். தமிழ்நாடு மாநிலத்தில் மனுக்கள், வழக்குகள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் வழியாக ஊழல் மற்றும் சட்டத்திற்கெதிரான தீமைகளுக்குத் தீர்வுகாண முற்பட்ட டிராஃபிக் ராமசாமி மற்றும் அவரது புரட்சிகரமான, நடவடிக்கைகளை இத்திரைப்படம் நேர்த்தியாக சித்தரிக்கிறது. சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர அவர் எதிர்கொண்ட தொடர் போராட்டத்தையும் இக்கதை முன்னிலைப்படுத்துகிறது.

எல்லாமே என் ராசாதான் என்பது, 1995 ஆம் ஆண்டில், பிரபல நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரண் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகும். பிரபல நடிகைகள் சங்கீதா மற்றும் ரூபஸ்ரீ ஆகிய இருவரும் இதில் நடித்திருக்கின்றனர். தனது மனைவியின் கொலைக்கு பழிதீர்க்க தனித்திருக்கும் ஒரு கிராமத்திற்கு தனது மகளோடு பயணிக்கும் பயணிக்கும் சிங்கராசின் (ராஜ்கிரண் நடிப்பில்) வாழ்க்கையை இது சித்தரிக்கிறது. கொலையாளியை தண்டிப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தவும் சிங்கராசு முற்பட, அதன்பிறகு ஏற்படு ஏற்படும் நிகழ்வுகள் தான் கதையின் மையமான, அதிரடித் திருப்பமாக அமைகிறது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில் வடிவேலு வின் “எட்டணா இருந்தா பாடலும் இடம்பெற்றுஇருக்கிறது

ஜுலை 4, இந்த ஞாயிறன்று சினி காம்போ நிகழ்ச்சியில் இத்திரைப்படங்களை கண்டு மகிழ, பிற்பகல் 1:00 மணி மற்றும் 4:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.