

@sheikmastanv @sabaricute86 @senbhacreations @trendmusicsouth @PRO_Priya @spp_media
@geethamurugan7
@khader00634436

கமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்!!!
சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் ஆங்கில மருத்துவத்தை தோலுரிக்கும் திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தின் ஒளியமைப்பாளராக திரு. பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ அவர்களால் கையாளப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பத்திரிகையாளர்களின் திரையிடல் சில தினங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. பல திரைப்படங்களில் பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரும் கண்ணீர் மல்க படத்தை வெகுவாக பாராட்டினர். மேலும் இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தை யும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அடுத்த கட்ட பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.