குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் : யோகி பாபு, செந்தில், சரவணன், மயில்சாமி, லீஸிஆண்டனி, சுப்பு பஞ்சு, இமயவர்மன், அத்வித் ஜெய்
மாஸ்தன் , வைகாரோஸ், அஸ்மிதாசிங் சித்ரா
லட்சுமணன், ஹரிகா பெடடா மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : என்.சங்கர் தயாள்
மியூசிக் : ‘ சாதகப் பறவைகள் சங்கர்.
ஒளிப்பதிவு:-ஜெ.லஷ்க்மண் குமார்
படத்தொகுப்பு:- ரிச்சர்ட் கெவின்.ஏ
தயாரிப்பாளர்கள் :- மீனாட்சி அம்மன் மூவிஸ் – அருண்குமார்.
சம்பந்தம் & என் சங்கர் தயாள்.
பிரபல
அரசியல்வாதியான யோகி பாபுக்கு
திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும்
போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணுடன் நட்பு
எற்பட இதனால் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறான்.
அதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி
விடுகிறார்கள். அவரது மகன் தனது
தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி
ஆட்சி அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த
மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு
செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். இவர்கள் இருவரும் ஒரே
பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம்,
தேர்தல், சதி என்று அரசியல்வாதி
களுக்கான
அம்சங்களோடு வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது
போல் இவர்களது எதிர்காலம் சரியாக அமைந்ததா?,
இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும்
மையமாக வைத்துக் கொண்டு
நகைச்சுவையாக சொல்ல இருப்பது தான்
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.
யோகி பாபு கதையின் கதாநாயகன் நாயகனாக நடித்துள்ளார். படத்தின்
சில இடங்களில் கொஞ்ச காட்சிகள்
தலைக்காட்டி வருகிறார். இதனால், பல
இடங்களில் யோகி பாபு வழக்கம் போல், கேலி செய்து சிரிக்க வைத்திருந்தாலும்
அவரது காமெடிக் காட்சிகள்
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள்
இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும்
கேமரா முன்பே பயமின்றி மிக
தைரியமாக நடித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கான சில காட்சிகள் அவர்களது
வயதை மீறியதாக வசனங்கள்
தடுமாற்றம் இன்றி மிக தெளிவாக நடித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை
நினைவு வருவது போல் வடிவமைக்கப்பட்டு
ள்ளது. சிறுமி ஹரிகா பெடடாவின் திரையில்
நடிப்பும் படத்திற்கு மிக கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில்
முகம் காட்டியுள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல்
கட்சித் தலைவராக நடிப்பில் மிக அமர்க்களப்படுத்தியுள்ளார்.
அவர் வரும் காட்சிகளில் காமெடி இல்லை என்றாலும், ”எத்தனை பேர் வந்து
இறுதியில் காணாமல் போவது அவர்கள் தான், என் கட்சி இல்லை”
என்ற அவரது வசனத்தை
சாதாரணமாக பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்.
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற
வேடங்களில் நடித்திருக்கும்
அனைவரும் அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில்
பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு
பலம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின்
ஒளிப்பதிவிலும் குறையில்லை.
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, முடிந்த அளவுக்கு
முழு படமாக கொடுத்துள்ளார்
எழுதி இயக்குகிறார் என்.சங்கர் தயாள், தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப
அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக
சொல்ல முயற்சித்திருக்கிறார்.
இயக்குநரின் அரசியல் நையாண்டிகள் காட்சிகள் மூலம் புரிந்தாலும், அதில்
இருந்த நகைச்சுவைகள் பெரிதாக ரசிக்கவும் இல்லை யோகி பாபுவை படம் முழுவதும் வரவில்லை
படத்தின் முயற்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இல்லை
சிறுவர்களிடம் வேலை வாங்கிய விதம் மற்றும் பள்ளி மாணவர்
தலைவர் தேர்தல் மூலம் அவர்களுக்கிடையே ஏற்படும் போட்டி, அதில்
நடக்கும் சதி, ஏமாற்றம், அதை தொடர்ந்து இரண்டு சிறுவர்களின் அரசியல் எதிர்காலம்
ஆகிய நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை
சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார் கிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ குறைகள் இருந்தாலும் கொஞ்சமா சிரிக்கலாம்.