ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் ராதிகா சரத்குமார தயாரித்து ZEE5 ஒரிஜினல் ஓ டி டி வெளியாகி வசந்தபாலன் இயக்கி கிஷோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தலைமைச் செயலகம்!
ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்!
இசை ஜிப்ரான் !
ஒளிப்பதிவு வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் !
தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.
சாட்சிகள் அனைத்தும் கிஷோருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் கிஷோருக்கு எதிராகதான் வர வாய்ப்பிருப்பதாக அனைவரும் அறிகின்றனர்.
இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது.
கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.
அதேசமயம், அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா. இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அப்பதவிக்கு குறி வைக்கிறார்.
ஷ்ரேயா ரெட்டி மீது இருக்கும் நட்பால், ஷ்ரேயா சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் கிஷோர்.
அதேசமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தை தேடி, சிபிஐ போலீஸ் அலைகிறது. அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக EX.M.P.க்களையும் அந்த துர்கா கதாபாத்திரம் கொலை செய்து வருகிறது.
தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத். இந்த வழக்கானது நூல் பிடித்தவாறு செல்கிறது. இவை அனைத்தும் ஒருபுள்ளியில் வந்து இணைகிறது
.
அந்த புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? துர்கா யார்.? கிஷோருக்கு தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா.? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்வதே தலைமைச் செயலகம் தொடர்க்கதை.
கதையின் முதன்மையான கதாபாத்திரத்தில் முதல்வராக நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் கிஷோர். கொற்றவை கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்
நாயகி ஷ்ரேயா ரெட்டி. பல இடங்களில் தனது முத்திரை நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்
ஷ்ரேயா.
துணிச்சலான கதாபாத்திரம் ரம்யா நம்பீசனோடது. அமைச்சராக இறுக்கமான முகத்தோடு பேசும் வசனங்கள் கைதட்டல் தட்ட வைக்கின்றன
.
சிறப்பாக நடித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், மிகப்பொருத்தமாக இருக்கிறார்.
சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் விசாரணைத் துணுக்குகள் ரசிக்க வைக்கின்றன.
கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி அவர்கள் கொடுத்த கதை பாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்
ஜிப்ரனின் இசை தொடரை ரசிக்கவைக்கிறது.
வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு தொடருக்கு மிகப் பெரிய பலம்
நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை மிகவும் நேர்த்தியான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். பாராட்டுக்கள்
தலைமைச் செயலகம் மே 17 ல் வெளியாகிறது
மொத்தத்தில்
*தலைமைச் செயலகத்தில் ஒரு அரசியல்* !!