“
செல்லக்குட்டி” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:- டாக்டர்.
டிட்டோ மகேஷ்,
தீபக்ஷிகா, சிம்ரன், சாம்ஸ், மதுமிதா,
திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா, ஆகியோர்.
டைரக்டர்:- சகாய நாதன்.
மியூசிக் :- டி.எஸ்.முரளிதரன்.
பின்னணி இசை. சிற்பி
ஒளிப்பதிவு:-
பால்.லிவிங்ஸ்டன்.
பாலா. பழனியப்பன்
தயாரிப்பாளர் :-
ஸ்ரீ சித்ரா பௌர்ணமி பிலிம்ஸ் – வி.மணிபாய்.
1990- ம் ஆண்டுகளில் வாழ்க்கை நடந்த சம்பவத்தை மையமாக வைத்து பின்னப் பட்டக் கதை இதுல கதாநாயகர்கள் டிட்டோ, மகேஷும் மற்றும்
கதாநாயகி தீபிக்ஷாவும் ஒரே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துவருகிறார்கள்
அம்மா, அப்பா, இல்லாத மகேஷ் மீது தீபிக்ஷா அதிக இரக்கம் காட்ட, அதையே காதல் என்று
நினைத்துக் கொள்ளும் மகேஷ், அவளை
ஒருதலையாக காதலிக்கிறான். ஆனால், தீபிக்ஷா மகேஷின்
நண்பர் டிட்டோவை ஒருதலையாக
காதலிக்கிறாள். மகேஷ் தீபிக்ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை
அவள் மகேஷை நிராகரித்து விலகி விடுகிறாள். இதனால் படிப்பில் கவனம்
செலுத்த முடியாமல் மகேஷ் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்
தேர்ச்சியடையாமல் வாழ்க்கையில் மனதளவில் பெரும் விரக்தியடைகிறான்
அவனது மற்ற நண்பர்கள் வெற்றி பெற்று பொறியியல் கல்லூரியில் படித்து
பட்டம் வாங்கி வாழ்க்கையில் சிறப்படைகிறார்கள்.
இதனால் தீபிக்ஷாவின் உள்ளத்தில் இருக்கும் டிட்டோ
அவரது வாழ்க்கை துணையாக மாற காலம் உதயமாகிறது. ஆனால், நண்பன் காதலித்த பெண்ணை தான் திருமணம்
செய்வது கொள்வது நம்பிக்கை துரோகம், என்று நினைத்த டிட்டோ தீபிக்ஷாவை நீ வேண்டாம் என்று
நிராகரித்து விடுகிறான். தான் ஆசைப்பட்டாலும்,
விருப்பம் இல்லாதவரை நான் மணக்க கூடாது என்று தீபிக்ஷாவும் டிட்டோவை
நிராகரித்து விட, அதன் பிறகு இவர்களது
வாழ்க்கை என்ன ஆனது? என்று இந்த சென்டிமென்ட் காதலுக்காக
வாழ்க்கையை தொலைத்த மகேஷ்
என்ன ஆனான் ? என்பது தான் இந்த கதை.
முதன்மையான கரெக்டரில் நடித்திருக்கும் புதிய நடிகர்கள் டாக்டர்.டிட்டோ,
மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்பே
பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு பிரமாதமாக
நடிக்கவும், கவனிக்க படுக்கிறார்கள். பள்ளி
மாணவர்களாக இருந்து படிப்பு முடிந்து போகும் காலக்கட்டத்தில்
நடிப்பில் பெரிய வேறுபாடு தெரிகிறது.படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார்கள். இருவரும்,
கதாநாயகியாக நடித்திருக்கும் தீபிக்ஷா குடும்ப பெண்ணாக, ஜொலிக்கிறார். நடிப்பில் தனியாக கவனிக்க
படுகிறார். இன்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குறைவான காட்சிகளில்
வந்தாலும், இன்னும் நிறையவே
காட்சிகளில் வந்திருக்கலாம். என்று நினைக்க தோணுகிறது.
கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியராக
நடித்திருக்கும் சாம்ஸும் சில இடங்களில் சிரிக்க வைக்க வைத்திருக்
கிறார்கள்.
அடுத்த வேடங்களில் நடித்திருக்கும் திடியன்,
சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா என அனைத்து நடிகர்களும்
சிறப்பாக கொடுத்த கதாபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள்
அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது
மெல்லிசை. சிற்பியின்
பின்னணி இசை இனிமையாக பயணிக்கிறது.
ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும்
பாலா பழனியப்பன் ஆகியோர் ஒளிப்பதிவு கேமராவின் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
பாடல் காட்சிகளை அழகாக காட்சிப்படுத்திருக்
கிறார்.
திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ’சிந்துநதி பூ’
செந்தமிழன், 1990-ம் காலம் நடந்த காதலை மிக நேர்த்தியாக பதிவு
செய்திருக்கிறார்
காதலர்களுக்கான
சரியான தகவலை அழுத்ததிருத்தமா
நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் சகாயநாதன்,
உண்மையான காதல் என்ன? என்பதை அழகாக
சொல்லியிருக்கிறார், படம் பார்ப்பவர்களை தங்களது கடந்த கால
காதல் நினைவோடு பயணிக்க வைத்துவிடுகிறார்.
முக்கோண காதல் கதையாக இருந்த காதலை ஒவ்வொரு காலக்கட்டங்களில்
வேறு விதமான காதலை வித்தியாசமான பயணிக்க வைத்திருக்கிறார்
க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு உள்ளங்களும் ஒன்றாக சேர்ந்திருப்பது தான்
உண்மையான காதல், என்பதை
கமர்ஷியலாக கருத்தாகவும் சொல்லியிருக்கிறார்.
சில காட்சிகள் வந்து இருந்தாலும், சொல்ல வந்த
எந்தவித நெருடலும் தொந்தரவு இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கலாம் .
பொழுதுபோக்கு படமாக நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் சகாயநாதன்.
மொத்தத்தில், இந்த ’செல்ல குட்டி’ சின்ன குறைகள் இருந்தாலும்
இயற்கையான இனிப்பை தரும்
தித்திக்கும் தேனை போல இனிமையாக இனிக்கிறாள். இந்த செல்லக்குட்டி.