வார இறுதி டபுள் தமாக்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ~ 1 ஆகஸ்ட், ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு படங்களை பார்த்து மகிழுங்கள் சென்னை, ஜூலை 30, 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை மகிழ்விக்க, கேளிக்கை நிறைந்த சிறந்த படங்களான ‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக திரையிடப்பட உள்ள இந்தப் படங்கள் திகில், நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை கொண்ட திரைப்படங்கள் ஆகும். ஆகவே, இந்தப் படங்கள் இந்த வார இறுதியில் பார்வையாளர்களை எங்கும் அசையவிடாமல் இருக்கையில் உட்கார வைப்பது உறுதி. முற்றிலும் கேளிக்கை நிறைந்த இந்தப் படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகிறது. எனவே இந்தப் படங்களை பார்க்க ஆகஸ்ட் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி மற்றும் 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். திகில் நிறைந்த நாயே பேயே படம் 2021-ம் ஆண்டு வெளிவந்த படம் ஆகும். இந்தபடத்தை சக்தி வாசன் இயக்கி உள்ளார். இதில் ஐஸ்வர்யா, தினேஷ் குமார், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகில் நிறைந்த இந்தப்படத்தின் கதை கர்ணா (தினேஷ் குமார் நடித்துள்ளார்) மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வருகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து கரீனா (ஐஸ்வர்யா நடித்துள்ளார்) என்ற பெண்ணை கடத்திச் செல்கிறார்கள். இந்த நிலையில், அவள் பெண் அல்ல பேய் என்பதை பின்பு அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். படத்தின் மீதி கதை அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியதாகும். இந்தப் படம் சில அற்புதமான வேடிக்கையான மற்றும் பரபரப்பான தருணங்களுடன் சரியான நகைச்சுவை விருந்தாக அமைகிறது. கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற காலேஜ் குமார் திரைப்படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தனது முதலாளியால் அவமதிக்கப்பட்டதால், தனது மகனை சிறந்த ஆடிட்டராக உருவாக்க வேண்டும் என்று கனவு காணும் ஒரு பியூனான நடிகர் முருகனின் (நடிகர் பிரபு நடித்து) லட்சியக் கனவைச் சுற்றி கதை அமைந்துள்ளது. இதில் பிரபல நடிகர் பிரபு, மது மற்றும் நாசர் உட்பட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரபுவின் மகன் சிவகுமார் (ராகுல் விஜய்) முறைகேடாக குற்றம் சாட்டப்பட்டு கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும்போது கதை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே மறக்காமல் வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு இந்த திரைப்படங்களை பார்த்து வார இறுதியை மகிழ்ச்சியாக மற்றும் உற்சாகமாக கொண்டாடுங்கள்.
Category: Press Release
The ultimate fight for survival to come alive first time on a Tamil Television. Zee Tamil set to launch the worldwide famous reality show “Survivor” in India.
The ultimate fight for survival to come alive first time on a Tamil Television. Zee Tamil…
Mohan Raman becomes 93rd President of Rotary Club of Madras.
Mohan Raman becomes 93rd President of Rotary Club of Madras. Actor Mohan Raman has taken over…
500 எபிசோடுகள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் மாஸ்டர் செஃப்
500 எபிசோடுகள் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் மாஸ்டர் செஃப் – சர்வதேச சமையற்கலை போட்டி நிகழ்வு!இச்சிறப்பான சாதனை எபிசோடை ஒளிபரப்பும் முதல்…
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நியூஸ் 50’
‘நியூஸ் 50’ நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நியூஸ் 50’ ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் ஜெட்வேகத்தில் தினமும் இரவு 8:00…
“ஆல் இன் ஆல் அழகு ராஜா”
“ஆல் இன் ஆல் அழகு ராஜா” சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆல் இன் ஆல் அழகு ராஜா”. தினந்தோறும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் சினிமா செய்திகளையும் விளையாட்டு செய்திகளையும் செய்திகளாக வழங்காமல் நையாண்டிதனத்துடன் தொகுத்து …
சற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்
சற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விகடனின் “நாயகி” நெடுந்தொடருக்கு தமிழ் மக்களிடையே…
“STIR FRY” (Every Monday at 12:00pm) PEPPERS TV
“STIR FRY” (Every Monday at 12:00pm) PEPPERS TV is a young next generation Tamil channel with innovative programming…
ஸ்டிர் பிரை
ஸ்டிர் பிரை பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் சைவம், அசைவம் என விதம் விதமான உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டிருப்போம்.. ஆனால் அவர்களின் சமையற்கூடம்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்களின் பேராதரவு பெற்ற ‘சத்யா’ நெடுந்தொடர்
‘சத்யா’ நெடுந்தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மக்களின் பேராதரவு பெற்ற ‘சத்யா’…