Actress Brigida shares her experience of working in ‘Velan’ Actress Brigida is super-excited about the release…
Category: Press Release
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டியை காணத் தயாராகுங்கள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டியை காணத் தயாராகுங்கள் ~ இந்த வார நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை மேலும் சிறப்பூட்டவிருக்கிறார் ~ சென்னை, டிச.31- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் இணைந்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பல மாத விடா முயற்சிக்கு பிறகு இந்த வார இறுதியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும். அரை இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வழங்கவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்க இருக்கிறார். இது மேலும் உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். இரண்டு நடுவர்களுடன் இணைந்து “செம்ம போத” பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 3 அணிகளாக பிரிந்து நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்த வரும் இந்த அரையிறுதி போட்டியில் ராய்சன் – மெர்சினா மற்றும் அபிராஜ் – அஞ்சனா அணிக்கும், காவ்யா – மகாலட்சுமி மற்றும் நாவலரசன் – அலிஷா அணிக்கும், கார்த்திக் – தியாகு மற்றும் ஐஷு – அல்ஹேனா அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. எனவே 1 மற்றும் 2 ஜனவரி 2022 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மாலை 7.30 மணிக்கு டியூன் செய்யுங்கள். சிறந்த நடன கலைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.
வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா !
வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா ! வேலன் திரைப்படம் டிசம்பர் 31, 2021 உலகம்…
டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் அனல் பறக்கும் டிக்கெட் டூ ஃபினாலே சுற்று போட்டி
டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் அனல் பறக்கும் டிக்கெட் டூ ஃபினாலே சுற்று போட்டி தமிழரசன் திரைப்படக் குழுவினர் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண வார இறுதி நாட்களில் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் சென்னை, டிச.23– கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ இணைந்து தொகுத்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா நடுவர்களாக பங்கேர்க்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழரசன் திரைப்படத்தை சேர்ந்த, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட இருக்கிறார்கள். அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியை காண வரும் டிசம்பர் 25 மற்றும் 26 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து மகிழுங்கள். இந்த வார இறுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளுக்கு இடையே 5 பிரமாண்ட போட்டிகள் இடம்பெற உள்ளன. இதை பிரபல தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பான முறையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவோம் என போட்டியாளர்கள் சபதம் செய்து இருக்கிறார்கள். நடிகர் ஷாம் அணியைச் சேர்ந்த ஐஷு – அல்ஹேனா ஜோடி பாகுபலி பட பாடலுக்கு, நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஜோடி மற்றும் நடிகை அபிராமி அணியைச் சேர்ந்த அபிராஜ் – அஞ்சனா ஆகியோர் புதுப்பேட்டை படத்தில் இருந்து ‘புல் பேசும் பூ பேசும்’ பாடலுக்கு நடனமாட இருக்கிறார்கள். இதற்கிடையில், நடிகை இனியா அணியைச் சேர்ந்த பிரித்வி – தியான் ஜோடி காதலன் படத்தில் இருந்து மனதை கொள்ளை கொள்ளும் பாடலான ஊர்வசி பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்த போட்டிக்கு இடையிடையே போட்டியாளர்களிடம் நடுவர்களும், தமிழரசன் திரைப்படக் குழுவினர் கலந்துரையாட இருக்கிறார்கள். அத்துடன் மட்டுமல்லாமல் இரண்டு அணிகள் வெற்றி பெற்று முன்னேறி செல்லும், இரண்டு அணிகள் தங்கள் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் பயணத்தை முடித்துக் கொள்வதன் மூலம் நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக இருக்கும். இருப்பினும், நடிகை குஷ்பு ஒரு அணியை வெளியேற்றாமல் காப்பாற்ற லைப்லைனைப் பயன்படுத்துவார். அதில் எந்த அணி உள்ளே இருக்கும், எந்த அணி வெளியேறும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.…
Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 15th December 2021 – 18th December 2021
Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 15th December 2021 – 18th December 2021LetsBowl, Thoraipakkam, Chennai…
டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான்
டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான் டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த மாநாடு…
Actor-Prankster Rahul on Velan
Actor-Prankster Rahul on Velan Prankster Rahul has created a huge fan base for his innovative and…
கின்னஸ் சாதனை புரிந்த டான்ஸ் மாஸ்டர் I.ராதிகா!
கின்னஸ் சாதனை புரிந்த டான்ஸ் மாஸ்டர் I.ராதிகா! சமூக செயல்பாட்டாளர் திரு Dr.R.J.ராமநாரயணன் AMN Fine Arts சார்பில் கலைகளை பற்றிய…
“சினிமா பேட்டை”
“சினிமா பேட்டை” சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம்1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “சினிமா பேட்டை”. உலகில் சினிமா என்பது…
KRIPA DHARMARAJ CROWNED AS MANAPPURAM MRS SOUTH INDIA 2021
KRIPA DHARMARAJ CROWNED AS MANAPPURAM MRS SOUTH INDIA 2021 Pegasus Event Production Company marks another milestone…