ஜெ.துரை
தலைநகரம்-2 திரை விமர்சனம்
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தலைநகரம்-2
இப்படத்தை எஸ்.எம். பிரபாகரன் தயாரித்துள்ளார்
பாலக் லால்வானி, தம்பி ராமையா, ‘பாகுபலி’ பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ், என பலரும் நடித்துள்ளனர்
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
இது சுந்தர்.சி 2006 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமான ‘தலைநகரம்’ படத்தின் 2ம் பாகம் தான் தலைநகரம்-2
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
திருந்தி வாழும் சுந்தர்.சி தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் பணிகளை மேற்கொள்கிறார்
மறுபக்கம் வடசென்னை ஜெய்ஸ் ஜோஸ் மத்திய சென்னை விஷால் ராஜன், தென் சென்னை பிரபாகர் என சென்னை பகுதிகளை ஆட்டிப்படைக்கும் ரவுடிகள் இடையே அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்ட போட்டி நடக்கிறது
இதில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜன் உடன் தொடர்பில் இருக்கும் நடிகை பாலக் லால்வானி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்
அவரை கடத்தியது தொடர்பாக விஷால் ராஜனும், தம்பி ராமையாவுடனான பிரச்சினையில் ஜெய்ஸ் ஜோஸூம் யதேச்சையாக ஒரு பிரச்சினையில்
பிரபாகர் சீண்டிப் பார்க்க
சுந்தர்.சி மீண்டும் ‘ரவுடி ரைட்’ ஆக மாறுகிறார் இதன்பின்னர் இவர்கள் 4 பேரின் நிலைமை என்ன தலைநகரத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றியது யார்?
என்பது தான் படத்தின் கதை
ஆக்ஷன் காட்சிகளில் சுந்தர்.சி மிரட்டுகிறார். ரிட்டையர்ட் ரவுடியின் கேரக்டரை அசால்டாக செய்து பாராட்டைப் பெறுகிறார் மற்றவர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் குறைவில்லாமல் தங்களது திறமைகளை காட்டியுள்ளனர்
முழு ஆக்ஷன் பேக்கேஜை கொடுத்துள்ளார் இயக்குனர்
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் தலைநகரம்-2 முதல் பாகத்தை மிஞ்சி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது