*லஞ்ச பூமி. திரை விமர்சனம் !!*
ஆர். செந்தில்குமார் தயாரித்து பட்டுராம் செந்தில் இயக்கி மூவி வுட் ( ஒடிடி தளத்தில் ) வெளியாகியுள்ள படம் லஞ்ச பூமி.
இப்படத்தில்
பட்டுராம் செந்தில் திருச்சி பாபு ஆதேஷ்பாலா சேரன்ராஜ் சுதாகர், அனு கிருஷ்ணா, சாசனா ரோஸ், அமிர்தலிங்கம், நாமக்கல் குணா மற்றும் பலர்நடித்து இருக்கிறார்கள்.
பணபலம் அரசியல் பலம் உள்ள பெரிய ரவுடி திருச்சி பாபு. மினிஸ்டர் வரைக்கும் செல்வாக்கு உள்ளவர்.
வருமானவரித்துறை அதிகாரிகள் வில்லலான திருச்சி பாபு வீட்டை சோதனை செய்ய, சோதனை செய்ய வந்த அதிகாரிபிடம் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க இல்லேன்னா இங்கிருந்து உயிரோடு போகமுடியாது என்று பாபு மிரட்ட, நேர்மையான அதிகாரி ரவுடி பாபு மிரட்டலுக்கு பயந்து லஞ்சம் வாங்க சம்மதிக்கிறார். இந்த சம்பவத்தை ஜெய் டிவி ரிப்போர்ட்டர் சுதாகர் படமெடுத்துவிடுகிறார். ரிப்போர்ட்டரான சுதாகர் படமெடுப்பதைகண்ட பாபு ரவுடியின் அடியாட்கள் அவரை தொறத்த ரிப்போர்ட்டர் சுதாகர் அவர்களிடமிருந்து தப்பித்துவிடுகிறார். வில்லன் வீட்டில் எடுத்த காட்சிகளை ஜெய் டிவி ஓனர் சேரன்ராஜிடம் கொடுத்து ஒளிபரப்ப சொல்கிறார் ரிப்போர்ட்டர் சுதாகர். இதே சமயத்தில் வில்லன் பாபு நம்மை யார் படமெடுத்திருப்பார் என சந்தேகப்பட்டு பலரை அடித்து துவம்சம் செய்கிறார் அச்சமயம் ரவுடி பாபுவுக்கு நான்தான் வீடியோ எடுத்தேன் என்று பேரம்பேசி பணம் வாங்கிக்கொள்கிறார் ஜெய் டிவி ஒனர் சேரன்ராஜ். இதையறிந்த ரிப்போர்ட்டர் சுதாகர் சேரன்ராஜிடம் என்ன நடந்தது என்று கேட்க, அதற்கு சேரன்ராஜ் அவர்களை எதிர்க்கமுடியாது சேனலை நடத்த வேண்டும் ஆதலால் பேரம் பேசி பணம் வாங்கிகொண்டேன். வாங்கிய பணத்தில் ரிப்போர்ட்டர் சுதாகருக்கு பங்குகொடுப்பதாக சொல்ல சுதாகர் வாங்க மறுத்து, சேரன்ராஜ் கண்ணத்தில் அறைந்துவிட்டு என்னிடம் ஒரு காபி இருக்கு உண்மையை வெளிக்கொண்டுவருவேன் என்று சொல்லிவிட்டு சுதாகர் செல்ல, ரிப்போர்ட்டரான சுதாகரையும் அவரது மனைவியும் கொன்றுவிட்டு இருவரும் தூக்கிலிட்டு இறந்துவிட்டதாக நம்பவைக்கின்றனர். இதன்பிறகு அந்த சேனலில் புதிதாக ரிப்போர்ட்டராக செந்தில் சேருகிறார். ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்தவர் அவருக்கு ஒரு அய்யர் போன் செய்து ஒரு உண்மை சொல்லவேண்டும் சீக்கிரம் வாங்க என்று சொல்ல அந்த இடத்திற்கு புதிய ரிப்போர்ட்டர் செந்தில் செல்ல அவர் கண் முன்னாலேயே ரவுடி பாபு தம்பி ஆதேஷ்பாலாவால் அய்யர் கொல்லப்படுவதை பார்க்கிறார். ரவுடி தம்பி ஆதேஷ்பாலா ஏன் அய்யரை கொன்றார்கள்? அந்த அய்யரையும் ரிப்போர்ட்டர் சுதாகரையும் அவரது மனைவி அனுகிருஷ்ணாவையும் கொன்ற ரவுடிகளான அண்ணன் பாபு தம்பி ஆதேஷ்பாலாவை புதிதாக சேர்ந்த ரிப்போர்ட்டர் செந்தில் அவர்களை என்ன செய்தார்? என்பதே இப்படத்தின் கதை.
ரவுடிகளாக பாபுவும் ஆதேஷ்பாலாவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ரிப்போர்ட்டராக சுதாகரும் அவரது மனைவியாக அனு கிருஷ்ணாவும் நன்றாக நடித்து கைதட்டல் பெறுகிறார்கள். ரவுடிகளான பாபு ஆதேஷ்பாலாவை பழிவாங்கும் ரிப்போர்ட்டராக இயக்குநர் பட்டுராம் செந்தில் சிறப்பாக நடித்துள்ளார். பாடல் காட்சிகளிலும் சண்டைகாட்சிகளிலும் அசத்தலாக நடித்து கைதட்டல் பெறுகிறார். பா. மோகன்ராம் இசையில் பாடல்களும் ஆணந்தஜோதியின் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. துரைராஜ் , ஷங்கர் இருவரின் எடிட்டிங் படத்தின் சுவாராஸ்யத்தை கூட்டுகிறது. கௌதம் கிருஷ்ணா, மகேஷ் இருவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். பட்டுராம் செந்தில் பாடல்கள் வரிகள் பாராட்டும்படி உள்ளது. ஜி வி பிரகாஷ் ஒரு பாடல் அருமையாக பாடியிருக்கிறார்
மற்ற பாடல்கள் மகாலிங்கம் & பாம்பே பாக்யா & திவாகர் பாடி ரசிக்கவைத்துள்ளனர்.
இயக்குநர் பட்டுராம் செந்தில் நம் நாடு லஞ்ச பூமியாக இருக்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்பதை பக்கா ஆக்சன் கதையாக எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருக்கிறார்பாராட்டுக்கள்.