BoyapatiRAPO தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 20 ஆம் தேதி தசராவிற்கு வெளியாகிறது.




ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் ஸ்ரீனிவாசா சித்தூரி வழங்கும், பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு மற்றும் உஸ்தாத் ராம் பொத்தினேனியின் #BoyapatiRAPO படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது!
திரைப்பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி இருவரும் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ள ‘மாஸ் கார்னிவல்’ படமான #BoyapatiRAPO-வை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் உள்ளனர். மேலும், படம் வெளியாவதற்கு முன், ராம் பொதினேனியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், இருவரும் இணைந்திருக்கும் #BoyapatiRAPO படத்தின் ‘ஸ்டார்ட்டர் ப்ளாஸ்ட்’டாக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த விஷுவல் ட்ரீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, ஏனெனில், அவர்கள் தங்கள் கதாநாயகனான ராமின் மாஸான எண்ட்ரியை வார்த்தைகளுக்கு அப்பால் பாராட்டியுள்ளனர். அவரது கடுமையான தோற்றமும் உடல்மொழியும் அவருடன் சேர்ந்து பிரம்மாண்டமான எருமையும் எதிராளிகளை அடித்து நொறுக்குவது என இந்த க்ளிம்ப்ஸ் திரையில் பரபரப்பாக உள்ளது. இந்த காட்சிகளுக்கு பொருத்தமான பன்ச் வசனங்களும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. படத்தில் சமீபத்திய சென்சேஷனான நடிகை ஸ்ரீலீலாவும் இருக்கிறார்.
காந்தமாக ஈர்க்கும் நடிகர் ராமின் திரைக் கவர்ச்சியையும் காட்சிகளையும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். தமனின் இசை மேலும் அதிரடியாக்கியுள்ளது.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை பெருமையுடன் தயாரித்துள்ளார். இதை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் பவன் குமார் வழங்குகிறார்கள். படத்தொகுப்பை தம்முராஜு கையாண்டுள்ளார்.