
‘கருப்பு பல்சர்” திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :-
தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, மன்சூர் அலிகான், அர்ஜய்,
சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி
டைரக்டர் : – முரளி கிரிஷ்.எஸ்.
மியூசிக் : – இன்பா.
ஒளிப்பதிவு :-
பாஸ்கர் ஆறுமுகம்.
படத்தொகுப்பு:-
சசிதக்ஷா
தயாரிப்பாளர்கள் :- யஷோ எண்டர்டெயின்
மென்ட் – டி.ஆர்.முரளி கிருஷ்ணன்.
ஆன்லைன் திருமண தகவல் மையத்தின் மூலம் சந்திக்கும்
கதாநாயகன் தினேஷும், நாயகி ரேஷ்மா
வெங்கடேஷும் காதலிக்கிறார்கள். தனது வருங்கால
மனைவியின் ஆசைக்காக பழைய கருப்பு நிற பல்சர் பைக் ஒன்றை தினேஷ்
வாங்குகிறார். அந்த பைக் அவரிடம் வந்ததில் இருந்து
அவரது வாழ்க்கையில் சில தவறான
சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கிடையில், தினேஷின் பைக் மூலம் சில
அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து
நடப்பதுடன், உயிர் பலியும் ஏற்படுகின்றன. இதனால் அந்த அச்சத்தில்
இருக்கிறார் தினேஷுக்கு, அந்த கருப்பு பல்சர் பைக் பற்றிய
அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன ?, என்பது தான்
படத்தின் கதைக்களம்.
கதாநாயகனாக
நடித்திருக்கிறார் தினேஷ் இரண்டு கதாபாத்திரங்களில்
நடித்திருப்மதால் தோற்றத்தை இரண்டுக்கும் பெரிய வித்தியாசத்தை
காட்டவில்லை. வழக்கம் போல் தனது
கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டு இருப்பவர், சில
இடங்களில் வாய் அசைவு தெரியாதவாறு
வசனங்களை உச்சரிக்கிறார். இதனால், அவர் பேசும் காமெடி
வசனங்கள் எடுபடாமல் போகின்றன. இருப்பினும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் பாராட்டும்படி
நடித்திருக்கிறார், ஜல்லிக்கட்டு
போட்டியிலும் நம்பும்படி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கிறார் ரேஷ்மா வெங்கடேஷ்
பாடல் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். மதுனிகா, பாடல் காட்சிக்கு கூட பயன்படுத்தவில்ல.
வில்லனாக நடித்திருக்கிறார் அர்ஜய் கொடுத்த வேலையை
குறையில்லாமல் செய்திருக்கிறார். மன்சூர் அலிகானின் அனுபவம் வாய்ந்த
நடிப்பு படத்திற்கு அடையாளத்தை கொடுத்திருக்கிறார்
அவரது அடியாளாக நடித்திருக்கும் கலையரசரன்
கன்னுசாமி மற்றும் அவரது குழுவினரின் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. போலீஸ்
இன்ஸ்பெக்டராக வரும் சரவண சுப்பையாவின்
கதாபாத்திரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவில் ஜல்லிக்கட்டு
போட்டியை காட்சிப்படுத்திய விதம் மற்றும் உண்மையான
ஜல்லிக்கட்டு போட்டி காட்சிகளை
இணைத்து, படத்தின் காட்சிகளை வடிவமைத்த விதம் ரசிக்க வைக்கின்றன
இன்பாவின் இசை மற்றும் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும்
வகையில் அமைந்திருக்
கின்றன பின்னணி இசையில் எதுவும் குறையில்லை.
ஜல்லிக்கட்டு போட்டியில் இருக்கும் அரசியல் கதைக்களமாக
இருந்தாலும், அதை கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த திரைக்கதையோடு
விவரித்திருக்கிறார் இந்த இயக்குனருக்கு, படத்தொகுப்பாளர்
சசி தக்ஷாவின் பணி பெரிய அளவில் கைகொடுத்திருக்
கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் முரளி கிரிஷ்.எஸ், ஜல்லிக்கட்டு போட்டியின்
பின்னணியில் இருக்கும் சாதி அரசியல், என்ற பலமான
கதைக்கருவை, கமர்ஷியல் பாணியில் சொல்லியிருப்பதால்தான் சொல்ல வந்தை நினைத்த கருத்தை பார்வையாளர்கள்
மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார்.
குறிப்பிட்ட பட்ஜெட் எல்லைக்குள் படம் பயணித்தாலும், மையக்கருவான
ஜல்லிக்கட்டு போட்டியை உண்மைக்கு நெருக்கமாக
காட்சிப்படுத்தியிருப்பதுடன், அதை திகில், காமெடி, காதல் என அனைத்துவிதமான
ஜானர்களுடன் ஒன்று சேர்த்து சொல்லி, அனைத்து தரப்பு மக்களும்
ரசிக்கும் படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் முரளி கிரிஷ்.எஸ்.
அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.