
பிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார். சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார்.
பிக்பாஸ் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது”.
மேலும், ” இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது” என்றார்.
தற்போது திரை நட்சத்திரமாக ஒளிரும் பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா பேசும்போது, “நான் IT-யில் சேர்ந்திருக்கலாம் அல்லது UPSC-க்கு தயாராகி இருக்கலாம். ஏனெனில், என் அப்பா என்னை எப்போதும் ஒரு IAS அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார்” என்று புன்னகையுடன் கூறினார்.
தற்போது முழு கவனமும் நடிப்பில் இருப்பதால் எந்த மாதிரியான கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார், “வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விருப்பம்” என்றார்.
மேலும், “கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதே சமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்” என்கிறார்.
இந்திய சினிமா மீதான காதல் பற்றி கேட்டபோது, “சீனியர் நடிகர்கள் ஷபானா அஸ்மி, ஸ்மிதா படில், அர்ச்சனா, ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் இவர்கள் எல்லாம் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் நான் முத்திரை பதிக்க விரும்புகிறேன்”.
“டீனேஜ் கதாநாயகிகளைப் போலவே கதையின் நாயகியாக எந்த வயதிலும் நடிக்கலாம் என்பதைப் பலரும் இப்போது நிரூபித்து வருகின்றனர். அதனால், என்னுடைய பெஸ்ட் கொடுப்பேன்”.
நிதானமாக ஆனால் தெளிவுடன் தனது சினிமா கனவு நோக்கி நகரும் அர்ச்சனா, “புதுமையான கதாபாத்திரம் அதற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கான விஷயங்கள் நிச்சயம் செய்வேன்” என்றார்.
தொடர்பு:
Media Contact: D’one
Point of contact: Lakshanika
Email ID: donetalents@gmail.com
PH. No: +91 78455 79797