பல்டி”திரைப்பட விமர்சனம் !

Share the post

“பல்டி”திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : – ஷேன் நிகம், சாந்த்னு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்ரன், ப்ரீத்தி அஸ்ரானி, மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- உன்னி சிவலிங்கம்.

மியூசிக் : – சாய் அபியங்கர்.

ஒளிப்பதிவு:-
அலேக்ஸ்.
ஜெ.புலிக்கல்

படத்தொகுப்பு:-
சிவக்குமார்.
வி.பனிக்கர்.

தயாரிப்பாளர்கள் :- எஸ்டிகே.பிரேம்ஸ் – உன்னி சிவலிங்கம்.

பொற்றாமை கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களது நண்பர்கள்

விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு பணத்தை ஆசைக்காட்டி தன் வசம் இழுக்கும்

கந்து வட்டி மாஃபியா செல்வராகவன், கபடி களத்தை மறக்கடித்து,

தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார்.

இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு

சிக்கல்களை எதிர்கொள்ள, அதுல இருந்து மீண்டார்களா ? இல்லையா ?

என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வது தான். “பல்டி” இந்த திரைப்பட
கதைக்களம்…

நாயகனாக நடித்துள்ளார்…ஷேன் நிகம், இவர் கபடி வீரருக்கான அத்தனை

உடல் மொழிக் கொண்டு மிக சர்வசாதாரணமாக அசால்டாக தில்லா தைரியமா நடிப்பை வெளிப்படுத்தி

நடித்துள்ளார்கள். இந்த சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பை

மிக வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துள்ளார்

ஷேன் நிகம், கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சி

களிலும் சரி, மிக வேகமாக செயல்பாடுகளில் வியக்க வைக்கிறார்.

ஷேன் நிகமின் நண்பராக இன்றொரு

நாயகனாக நடித்துள்ளார் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில்

அமர்க்களமாக நடித்து அசத்தியுள்ளார். இவர் நல்லவரா? அல்லது கெட்டவரா? என்று புரிய முடியாத

கதாபாத்திறத்தில் தனது நடிப்பின் மூலம் சிறப்பாக பலத்தை சேர்த்துள்ளார்.

வில்லனாக நடித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும்

விதத்தில் படத்திற்கு மிக கூடுதல் பலத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

இன்றொரு வில்லனாக நடித்துள்ளார்

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரை இருப்பு கவனம் ஈர்ப்பு, இருந்தாலும்

அவருக்கு திரையில் முக்கியத்தும் மிக குறைவாகவே உள்ளது.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த

வேலையை நேர்த்தியாக நிறைவாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது.

குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளின் வேகத்தில் ஈடுகொடுக்கும்
வகையில்

பயணித்திருக்
கின்றன பீஜியம்கள். கவனம் ஈர்க்கின்றன.

அதே சமயம், அனிருத் இசையை கேட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள்

காட்சிகளையும் அனைத்தும் மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்கபடி போட்டிகளை

மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.

படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பனிக்கரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. காட்சிகளை

தொகுத்த விதம் மிக கூர்மையாக இருக்கின்றது அதுல இருக்கும் உணர்வுகளை

பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தி சென்று இருக்கிறது.

செல்வராகவன் மீது அடி விழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் தனது

கத்திரி மூலம் தனி கதையை சொல்லியுள்ளார் படத்தொகுப்பாளர்

தனது கட்டிங் மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்தது

படத்தின் நீளம் அதிகம் சோர்வடைகிறது.
எழுதி

இயக்கியுள்ளார் உன்னி சிவலிங்கம், பல திரைப்படங்களின்

பாதிப்பாக இந்த படத்தை இயக்கி, ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும்,

விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.

கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில

அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு

இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்துள்ளார் திரைக்கதை, மற்றும் காட்சிகள்

பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.

சண்டைக்காட்சி
களின் நீளம் அதிகம் தொய்வடைய செய்கின்றன, சண்டைக்காட்சி

களில் பயன்படுத்தியுள்ளார் புதிய யுத்திகள் அதை ரசிக்க வைக்கிறது.

வித்தியாசமாகவும், புதிதாகவும் எதுவும் இல்லை.

கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும்

திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்றது என்று முழுமையான

கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும்

இயக்குநர் உன்னி சிவலிங்கம், கபடி அணிகளுக்கு பஞ்சமி,

பொற்றாமரை என்று பெயர் வைத்ததோடு,

உதயசூரியன் என்ற மலையாளப் பாடல் மூலமாக மறைமுகமாக

அரசியல் பேசி அமர்களப்படுத்தி
யுள்ளார்.

படம் பார்த்தத்தில், “பல்டி”இரண்டு இளைஞர்கள்

செம்மையாக அதிரடியாக அந்தர்‌ பல்டி அடித்து

சாம்பியன்ஷிப் பெற்றுள்ளார்கள்.
அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *