பேட் கேர்ள் “திரைப்பட விமர்சனம் …

Share the post

“Bad girl revie “
” பேட் கேர்ள் “
திரைப்பட
விமர்சனம் …

நடித்தவர்கள் :- அஞ்சலி சிவராமன், சாந்திப்ரியா, சரண்யா ரவிச்சந்திரன்,

ஹிருது ஹாரூன், டீஜய் அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்
பள்ளி மற்றும் நடித்துள்ளனர்…

டைரக்டர் : –
வர்ஷா பரத்.

இசை: அமித் திரிவேதி.

ஒளிப்பதிவு:-
ப்ரீதாஜெயராம்,
ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ்
ஆண்டராசன்.

படத்தொகுப்பு :-
ராதா ஸ்ரீதர்.

தயாரிப்பு: கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி.

நாயகி ரம்யாவுக்கு படிப்பு சரியாக வரவில்லை, பள்ளி பருவத்திலேயே தன்

பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் காதல், ஆரம்பத்தில்

நன்றாக சென்று வந்த இது பெற்றோர்களுக்கு தெரிந்து விடுகிறது. வழக்கம்

போல் காதலுக்கு வீட்டில் முட்டுக்கட்டை விழுகிறது.

அதனால் அம்மா, ரம்யாவை புதிய ஸ்கூலில் சேர்க்கிறார், அங்கு அவள் முதல் நாள் செல்லும்

போதே இந்த ஸ்கூல் வரைக்கு தான் உன் பேச்சை எல்லாத்தையும் நான் கேட்பேன், பின்னால்

கல்லூரியில் என் இஷ்டம் எனக்கு பிடித்ததை நான் செய்வேன், உனக்கு

பிடிக்காததையும் செய்வேன் என்று செல்கிறாள்.

நாயகி அஞ்சலி பள்ளியில் படிக்கும் போது போது சக மாணவனை

காதலிக்கிறாள். இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு நன்கு தெரிந்து விடுகிறது.

கண்டிப்பதுடன், வேறு பள்ளிக்கு அவளை மாற்றுகிறார்கள். பெற்றோர் மீது

கோபமடையும் அஞ்சலி, ”நீங்கள் சொல்வதை எல்லாம் இந்த பள்ளி முடியும் வரை தான் கேட்பேன்,

அதற்கு பிறகு நான் நினைத்தபடி தான் வாழ்வேன்” என்கிறாள். அவர்

சொன்னது போலவே கல்லூரி காலத்தில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி மாணவிகள்

விடுதியில் தங்கி படிக்கிறாள். அங்கே சீனியர் மாணவருடன் காதல், கட்டில் உறவு ,

என்று பயணிப்பவர்கள், அந்த காதல் பொய் என்பதை உணர்ந்து வருந்துகிறாள்,

கோபம் கொள்கிறாள். பிறகு வேலைக்கு செல்லும் காலத்தில் லிவிங் டூ கெதர்

வாழ்க்கை, அதிலும் சண்டை பிரிவு என்று பயணிப்பவர்கள்,

இறுதியில் தனது காதல் எது என்பதை
கண்டுபிடித்தாரா
களா ?

இல்லையா ? என்பது தான் மீதிக் கதைக்களம்.

அது தவறு, இந்த வயதில் இது தேவையா?, என்று சொல்லி கட்டுப்படுத்துவது

நினைப்பதை விட, பெண்களை சுதந்திரமாக விட்டாலே, அவர்களே அவர்களது

வாழ்க்கையில் எது தவறு, எது சரி என்று என்பதை உணர்ந்துக் கொள்வார்கள், என்ற

கருத்தை இந்த படத்தில் பேசுகின்றன. ஒவ்வொரு

காலக்கட்டத்திலும் பெண்கள், ஒவ்வொரு ரீதியாக

அடிமைப்பட்டு கிடப்பதும், அதில் இருந்து மீண்டும் வருவதை மிக

எதார்த்தமாக இயக்குநர் வர்ஷா பரத் சொல்லியிருக்கிறார்.

படத்தின் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி சிவராமன், முழு படத்தையும் தன்

நடிப்பால் மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள்

மெதுவாக நகர்ந்தாலும், அஞ்சலி சிவராமனின் நடிப்பு அதனை மறக்கடித்து

படத்தை ரசிக்க வைக்கின்றன. காதலனை நினைத்து உருகுவது, தான் ஏமாற்றப்பட்டிருப்பது

தெரிந்தும், காதலன் நினைவாக இருப்பது, மருத்துவரிடம் தனது

நிலை குறித்து விவரிப்பது, பூனையை கொஞ்சுவது,

பாட்டியின் இறப்பில் அழுவது என படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறாள்.

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சாந்திபிரியாவின் கதாபாத்திரமும்,

அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் எதார்த்தமாக இருக்கின்றனது.

சரண்யா ரவிச்சந்திரன், ஹிர்து ஹரூன், டீஜே,

சுஷாங் பொம்மரெட்டிபல்லி என மற்ற

வேடங்களில் நடித்தவர்களும் கதாபாத்திரங்
களுக்கு

பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் ப்ரீதா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்

ஆகியோர் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாக பயணிக்கின்றன. அமித் திரிவேதியின்

இசையிலும் குறையில்லை. ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பு படத்தை மெதுவாக

நகர்த்தினாலும், நாயகியின் உணர்வுகளை

பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தி சென்று
இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் வர்ஷா பரத், பெண்களுக்கு சற்றப்படும். அடிமைச்

சங்கிலி அடுத்த தலைமுறை
யினருக்கு எப்படி மாற்றப்படுகின்றன.

என்பதையும், அதில் இருந்து விடுபட முயற்சிப்பவர்களின் போராட்டம் மற்றும்

தங்களை தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு பயணிக்கும்

பெண்கள் மனதை மிக தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர்.

குறிப்பிட்ட சமூகம் மற்றும் மேல்தட்டு மக்களின்

வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கும்

இயக்குநர் வர்ஷா பரத், எந்த சமூகமாக இருந்தாலும், எப்படிப்பட்ட

வாழ்க்கைத்தரத்தில் இருந்தாலும், பெண்கள் என்றாலே இரண்டாம் இடத்தில்

வைத்து பார்க்கும் பொதுவான சமூகத்தைப் பற்றி பேச, குறிப்பிட்ட

மக்களுக்கு மட்டுமே புரியும்படி படத்தை இயக்கியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.

மொத்தத்தில், ‘பேட் கேர்ள்’ கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு

பேட்- ஆக தெரிந்தாலும், உலக சினிமா ரசிகர்களுக்கு குட் படமாக இருக்கும். இந்த படம் பார்த்தத்

தில் இளம் வயதினர் பார்க்க வேண்டிய திரைப்படம் கல்லூரி மாணவர்கள்

மாணவியர்கள் முக்கிய பார்க்க வேண்டிய

திரைப்படம். அனைவரும் பார்த்து கண்டு களியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *