
பேபி & பேபி’ திரை விமர்சனம் !!
யுவராஜ் பிலிம்ஸ் தயாரித்து ஜெய், யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஷ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் இவர்கள் நடிப்பில் பிரதாப் இயக்கி வெளி வந்திருக்கும் படம் ‘பேபி & பேபி’
இசை : டி.இம்மான்
ஒளிப்பதிவு : டி.பி.சாரதி
கதை
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜெய், பிரக்யா நாக்ரா தம்பதி சத்யராஜுக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள்.
குடும்பத்திற்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சத்யராஜுக்கு, மகன் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வருகிறது.
அதனால், ஜெய் மீதான கோபத்தை மறந்துவிட்டு அவரை மீண்டும் ஊருக்கு வரச் சொல்கிறார்.
அதன்படி ஜெய் தனது மனைவி குழந்தையுடன் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு செல்ல முடிவு செய்கிறார்.
ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் இளவரசு, ஜாதகப்படி வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதால், தன் மகன் யோகி பாபுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.
வெளிநாட்டில் யோகி பாபு சாய் தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இளவரசு அவர் மீது கோபம் கொள்கிறார்.
இதற்கிடையே, பெண் வாரிசு பிறந்தால் குடும்பம் அமோகமாக இருக்கும் என்று ஜோதிடர் சொல்ல, யோகி பாபுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் கோபத்தை மறந்த மகன் குடும்பத்தை வீட்டுக்கு வரச் சொல்கிறார் இளவரசு.
தனது குடும்பத்துடன் தமிழகத்துக்கு செல்ல யோகி பாபு முடிவு செய்கிறார்.
ஜெய் மற்றும் யோகி பாபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் பயணிக்கும் போது அவர்களது குழந்தைகள் மாறிவிடுகிறது
குழந்தைகள் மாறியது தெரியாமல் வீட்டுக்கு செல்பவர்கள் உண்மையை அறிந்து பதறுகிறார்கள்.
ஆண் வாரிசுக்காகவும், பெண் வாரிசுக்காகவும் காத்திருந்த அவர்களது குடும்பத்தில் எப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகிறது,
எப்படி சமாளித்து, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள் என்பதை இப்படத்தின் கதை
ஜெய் யோகி பாபு இவர்கள் நடிப்பு காமெடியும் கலந்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார்
சத்யராஜ், பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஷ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் அனைவரும் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள்
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை
டி.பி.சாரதி ஒளிப்பதிவு படம் முழுவதையும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
பிரதாபின் எழுத்தும் இயக்கமும் umor ரும் கலந்து அனைத்து நட்சத்திர மேல் ஜொலிக்க வைத்திருக்கிறார்
மொத்தத்தில்
பேபி பேபி அனைவர் இதயத்திலும் குடி இருக்கிறார்