“பாகுபலி” – திரைவிமர்சனம்: “!

Share the post

திரைவிமர்சனம்: “பாகுபலி” – இந்திய சினிமாவின் .

இன்னொரு மைல் கல்! பிரமாண்டமான திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்!

ஜூலை 10 – இந்திய சினிமாவின் 100 ஆண்டுகால அனுபவத்தை, உலகமே எதிர்பார்க்க இன்று வெளியான பாகுபலி படத்தில் காணமுடிந்தது.

காட்சிகளிலும், தொழில்நுட்பத்திலும்இசையிலும் ஹாலிவுட்

படங்களுக்கு ஈடாக, உலகத்தரத்தில் அத்தனை பிரம்மாண்டம். வரலாற்றுக் கதையை

அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருப்பினும், படம் தொடங்கியது. முதல்

முடியும் வரை நம்மை எங்கும் நகரவிடாமல் காட்சிகளில் அத்தனை

சுவாரஸ்யங்களைக் கொண்டிருக்கிறது பாகுபலி.

‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவரான ராஜமௌலி

இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், சுதீப், ரோஹினி மற்றும் பலர் நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மியூசிக்:- மரகதமணி.

கதை வசனம்:- மதன்கார்கி

கலை இயக்கம்:-சாபு சிரில் ஸ்ரீனிவாஸ் மோகன்.

காஸ்டியூமர் :- ரமா பிரசாந்தி.

ஒளிப்பதிவு:-
செந்தில் குமார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி இன்று

உலகமெங்கும் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.

கதைச் சுருக்கம்


மகிழ்மதி அரசின் வாரிசைக் கையில் எடுத்துக் கொண்டு மலை உச்சியில்

இருந்து குகை வழியே தப்பியோடி வரும் ரம்யா கிருஷ்ணன், அதை அப்பகுதியில் வாழும்

ஆதிவாசி மக்களிடம் ஒப்படைத்து விட்டு மலை உச்சியைக் கைகாட்டிவிட்டு இறந்துவிடுகின்றார்.

அரச வாரிசு என்று தெரிந்தும் அக்குழந்தையை எடுத்து வளர்க்கும்

ரோஹினி, அதற்குச் சிவா என்று பெயர் சூட்டுகின்றார். சிவா வளர்ந்து பெரியவனாகிறான்.

அங்கிருக்கும் நீர் அருவி வழியே மலை உச்சியை அடைய வேண்டும் என்று

பேரார்வம் கொள்ளும் சிவா பலமுறை தோல்வியைத் தழுகின்றான்.

அவனை அந்த மலை உச்சிக்கு மட்டும் போக வேண்டாம்

என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்

ரோஹினி. என்றாலும் ஒருநாள் சிவா கடின முயற்சிகளுக்குப்

பிறகு மலை உச்சியை அடைகின்றான்.

அங்கு தான் யார் என்று தெரிந்து கொள்ளும் சிவா, தனது கடமையை

நிறைவேற்று
கின்றான். இது தான் பாகுபலி படத்தின் கதைக்களம்.

நடிப்பு
சிவா மற்றும் பாகுபலி கதாபாத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்திற்கே

உரிய பிரம்மாண்ட தோற்றத்துடனும், கட்டுமஸ்தான உடற்கட்டுடனும் இருக்கிறார்.

அவ்வளவு பெரிய சிவன் லிங்க சிலையைத் தூக்கித் தோளில்

வைத்துக் கொண்டு நடக்கும் காட்சி.. அடடா.. அவ்வளவு என்ன அழகு..

நீர் அருவியில் ஏறி ஒவ்வொரு முறையும் அவர் கீழே விழும் காட்சிகள் நம்மை

இருக்கையின் விளிம்பிற்குக் கொண்டு வந்து விடுகின்றன.

அவ்வளவு பிரம்மாண்டமான அருவியில் இருந்து

தவறி விழுந்து ஒரு சிறு காயமும் இன்றி உயிர் பிழைப்பது போல்

காட்டியிருப்பது சற்று மிகை தான் என்றாலும், பிரபாஸின் பிரம்மாண்ட

உடற்கட்டும், வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களின் வலிமையைப் பற்றி

நாம் கேட்டறிந்த செய்திகளும் நம்மை நம்ப வைக்கின்றன.

சிவா கதாபாத்திரத்தில் கொஞ்சம் விளையாட்டுப் போக்காக நடித்திருக்கும்

பிரபாஸ், அதற்கு அப்படியே நேர் மாறாகப் பாகுபாலி

கதாபாத்திரத்தில் இளவரசராக முகபாவனைகளுடன், உடல்மொழிகளாலும் கவர்ந்து இழுக்கிறார். வீரத்திலும்,

புத்திசாலித்தனத்திலும் அவர் சிறந்து விளங்குவதாகக் காட்டப்படும்

காட்சிகள் உண்மையில் மெய் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.

இதுவரை தமன்னாவின் நடிப்பைப் பிடிக்காதவர்களுக்கு

க் கூட, இந்தப் படத்தில் அவரை மிகவும் பிடித்துவிடும்.

அவந்திகாவாக வாள் வீசுவதிலும், சிவாவின் பேச்சில் மயங்கிக் காதல் கொள்வதிலும் அத்தனை ஈர்ப்பு.
காவியத் தன்மை

கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும்

தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது

எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கிறார் பாகுபலி.

பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும்,

உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான்

பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத்

தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25

ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா

என, பழைய அடிமைப் பெண் படத்தின்

கதையை ஞாபகப்படுத்தும் கதைக்களம்.

மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம்.

மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா அருகிலுள்ள

அபாயகரமான மலை உச்சியின்பால் ஈர்க்கப்படுகிறான். புஜபலம் பொருந்திய வீர இளைஞனாக வளரும் சிவா

(பிரபாஸ்) தொடர்ந்து அந்த மலை உச்சியை நோக்கிச் செல்ல முயல்கிறான்.

பலமுறை தோற்கும் அவன் முயற்சி, மலையின் அந்தப் பக்கம் ஒரு அழகிய பெண்ணைக்

(தமன்னா) கண்டதும் புதிய உத்வேகம் பிறக்கிறது. அந்தப் பெண் மீது மையல் கொண்டவன்

அவளது லட்சியத்தைத் தன் லட்சியமாக ஏற்றுப் புறப்படுகிறான்.

தென்னிந்திய நிலப்பரப்பில் மகிழ்மதி ஒரு சாம்ராஜ்யம். அங்கே அரங்கேறும் சதியின்

விளைவால் ஒரு அரச குடும்பம் வீழ்த்தப்படுவதும், ராஜ வாரிசு எங்கோ வளர்ந்து, உண்மை அறிந்து பழி தீர்த்து

பகை முடிப்பதும்தான் கதை. மன்னன் பாகுபலியாகவும், மகன் சிவாவாகவும்

பிரபாஸ்… அரசி தேவசேனாவாக அனுஷ்கா… பாகுபலியுடன்

வாரிசுரிமைப் போர் நடத்தும் சகோதரன் பல்லாளனாக ராணா டகுபதி.

மகிழ்மதி தேசத்தின் சோதனையான சூழ்நிலையில் பல்லாளனுக்கும் பாகு பலிக்கும்

இடையில் நடந்த போட்டி என்னவாயிற்று என்பதைச் சொல்லி

படம் முடிகிறது. பாகுபலி என்ன ஆனான்? அவன்

மனைவிக்கும் வாரிசுக்கும் என்ன ஆயிற்று என்ற முன்

கதையைத் தெரிந்துகொள்ள

பாகுபலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டுமாம்.

அமர் சித்திரக் கதைகளை ஞாபகப் படுத்தும் ஃபேண்டசி படம்தான். அடிப்

படைக் கதையும் திரைக்கதையும் புதுமையானவை அல்ல. எனினும்

படத்தின் காட்சி அமைப்பும் பாத்திர

வார்ப்புகளும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகின்றன.

படத்தில் வரும் பிரம்மாண்டப் போர்க்காட்சிக்கான காரணம் எதிர்

பார்த்ததுதான். ஆனால் அதைப் பல திருப்பங்களுடன்

சுவாரசியமாக்கி யிருக்கிறார் ராஜமௌலி.

போர்க் களம், நகர அமைப்பு, போர் முதலானவற்றைத் திரையில்

காட்சிப்படுத்திய விதம் பிரமிக்க வைக்கிறது. ஒரு லட்சம் வீரர்களைக் கொண்ட காலகேயனின்

படையை, 25 ஆயிரம் வீரர்களைக் கொண்ட மகிழ்மதியின் படை எதிர்கொண்டு வெல்ல அமைக்கும்

வியூகமும், அந்த வியூகம் செயல்படும் விதத்தைக் காட்சிப்படுத்திய

விதமும் விரிவும் நுணுக்கமும் கொண்டவை.

திரண்ட புஜங்களும் முறுக்கேறிய உடலும் கொண்ட பிரபாஸ்,

ராணா டகுபதி இருவருமே சண்டைக் காட்சிகளில் தனித்துவமாக வெளிப் படுகின்றனர்.

பிரபாஸ் புஜபலம் காட்டும் இடங்களில் சோபிக்கும் அளவுக்கு அழுத்தமான உணர்ச்சிகளைக்

காட்ட வேண்டிய இடங்களில் சோபிக்க வில்லை. நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் ராணாவின்

கண்களில் தெறிக்கும் வன்மம் மனதில் நிற்கிறது. தமன்னா, வண்ணத்துப்

பூச்சிகள் மொய்க்கும் தேவதையாக அறிமுகமாகி, போராளியாகவும்

காதலியாகவும் இரு வித உணர்வு பாவங்களைக் காண்பிக்க முயற்சி செய்கிறார்.

நடிப்பு என்று சொன்னால் நாசர், சத்யராஜ், ரம்யா

கிருஷ்ணன் ஆகி யோர்தான் ஜொலிக்கிறார்கள்.

நிர்மாணிக்கப்பட்ட செட் எது, கம்ப்யூட்டர் உதவியுடன் உருவாக்கப்பட

வெர்ச்சுவல் செட் எது என்கிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியாத

சாபு சிரிலின் கலை இயக்கம், ஸ்ரீனிவாஸ் மோகனின் மேற்பார்வையிலான

விஷுவல் எஃபெக்ட் ஆகிய இரண் டும் படத்தின் பிரம்மாண்டத்துக்கு அடித் தளம்.

குறிப்பாகப் போர்க்களக் காட்சிகள் அபாரம். மகிழ்மதி ராஜ்

ஜியத்தின் தலைநகரைப் பிரமாத மான கற்பனையுடன் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார்கள்

கதாபாத்திரங் களின் ஆடை, அணிகளின் வடிவமைப் பாளர்கள்

ரமா, பிரசாந்தியும் பாராட்டுக்குரியவர்
கள்.

இத்தனை இருந்தும் முதல் பாதி சற்று இழுவைதான். பாத்திரங்களின்

பெயர்களை வைத்துப் பார்க்கும்போது கதை நடக்கும் நிலப்பரப்பு

தமிழகம் அல்லது தென்னிந்தியா என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பனி படர்ந்த

மலை எங்கே இருக்கிறது? பனிச் சரிவில் பிரபாஸும் தமன்னாவும் தப்பித்து வரும் காட்சியில்

விறுவிறுப்பு இருக்கும் அளவு நம்பகத்தன்மை இல்லை.

தேவசேனாவை மீட்டு வரும் காட்சியும் அப்படியே. பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளும் கலை வேலைப்பாடுகளும்

அபாரமான தொழில்நுட்பமும் சேர்ந்து இந்தக் குறைகளை ஈடுகட்டுகின்றன.

காலகேயர்களின் மொழி, தோற்றம், கொடூரம் ஆகியவை அவர்களைக் காட்டுமிராண்டிகளா

கச் சித்தரிக்கிறது. ஆனால் அவர்களுக்குக் கருப்பு வண் ணம் பூசப்பட்டிருப்பது

கருப்பு நிறம் மீதான ஒவ்வாமையையே பிரதிபலிக் கிறது.

மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் செழுமையைச்

சேர்க்கின்றன. மரகதமணியின் இசையில் பாடல்கள் கேட்கும்படி

இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் மற்றொரு பலம்.

எதிர்பார்ப்புகள் அதிகமாகக் கிளம்பு வது ஒரு படைப்புக்குப்

பாதகமாகவும் அமைந்துவிடக்கூடும். ஆனால் பாகுபலி ஏற்படுத்தும் பிரமிப்பு,

அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *