அயலான்’ திரைப்பட விமர்சனம் !!

Share the post

அயலான்’ திரைப்பட விமர்சனம் !!

கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்து ரவிக்குமார் இயக்கி வெளி வந்திருக்கும் படம் அயலான் !!

இசை ஏஆர் ரகுமான் !

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், கோதண்டம், பானுப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர் !

விண்ணில் இருந்து விழும் எரிக்கல்லின் சிறு பகுதி ஒன்று பூமியில் விழுகிறது.

அந்த எரிக்கல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் அது மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிய வருகிறது.

அந்த கல் மூலமாக பூமியை இதுவரை யாரும் தோண்டாத ஆழத்தில் தோண்டி பூமிக்கு அடியில் உள்ள மிக கொடிய விசவாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் ஈடுபடுகிறார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டு மொத்த பூமியே அழிந்துவிடும் என்பதை அறிந்துக்கொள்ளும் வேற்றுகிரகவாசிகள் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற முடிவு செய்கிறார்கள்.

அதற்காக வில்லனிடம் இருக்கும் அந்த எரிக்கல்லை கைப்பற்ற வேற்றுகிரகவாசி ஒருவர் பூமிக்கு வருகிறார்.

சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எரிக்கல்லை எடுக்க வரும் வேற்றுகிரகவாசி, சிவகார்த்திகேயனுடன் நட்பாவதோடு, தனது முயற்சியில் அவரையும் சேர்த்துகொள்ள, இருவரும் சேர்ந்து பூமியை அழிவில் இருந்து மீட்டார்களா?, இல்லையா?, வேற்றுகிரவாசிகள் பூமியை காப்பாற்ற நினைப்பது ஏன்? என்பதே இப் படத்தின் கதை.!
சிவகார்த்திகேயன்

,ஆக்‌ஷன் வசனம் காதல் ஆல் ரவுண்ட் யாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்
நடிப்பு
கமர்ஷியல்லாக இருக்கு !
பாராட்டுக்கள்.

ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். சிறப்பாக நடித்துள்ளார் !

யோகி பாபு, கருணாகரன் பால சரவணனும் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும்
)சரத் கேல்கர் ,இஷா கோபிகர் கதாபாத்திரம் ஏற்று நடித்து உள்ளனர் அருமை !

சித்தார்த் மற்றும் வேற்றுகிரகவாசியாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவனின் வேற்றுகிரகவாசிக்கு குரல் கொடுத்திருக்கும்
பணி சிறப்பு.

முனிஷ்காந்த், கோதண்டம், செம்மலர் அன்னம், பானுப்ரியா கொடுத்த கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள் !

.நிரவ்ஷாவின் ஒளிப்பதி சிறப்பு !

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ,பாடல்கள் லும் அருமை !
பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது!

கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் வேற்றுகிரகவாசி மிக சிறப்பாக உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சி மற்றும் அதன் செயல்பாடு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பதோடு, அதற்காக படக்குழு கடுமையாக உழைத்திருப்பதும் திரையில் தெரிகிறது.

இயக்குனர்க்கு பாராட்டு!

தொழில்நுட்ப ரீதியாக படத்தை தரமாக கொடுத்திருப்பதோடு,அறிவியல் தொடர்பான கதையை எளிமையான முறையில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் வில்லனிடம் மோதும் காட்சிகள் இழுவையாக இருக்கிறது.

குறிப்பாக பல இடங்களில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது போல் தோன்றுவதோடு, சிறுவர்களை ஈர்ப்பதற்காக சில காட்சிகள் திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

இந்த குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘அயலான்’ அனைவருக்குமான நல்ல பொழுதுபோக்கு படம் என்பதை மறுக்க முடியாது.

மொத்தத்தில்
அயலான் பார்க்கலாம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *