போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு காவல் துறை சார்பாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
இந் நிகழச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சாலை வழியாக விழிப்புணர்வு குறித்து வாசகங்கள் பதகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர் இந்த பேரணியை காவல் துணை ஆணையர் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

பேரணியாக கல்லூரி வளாகத்தை வந்தடைந்து அங்கு நடை பெற்ற சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் மனோகர் சிறப்புரை ஆற்றினார் இதனை தொடர்ந்து போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் போதையை ஒழிக்க தமிழக அரசும் போலீசாரும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த காணொளி காட்சியும் மாணவர்கள் மத்தியில் திரையில் காண்பிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்தினார்


அது மட்டுமின்றி கடந்த சில மாதங்களாக மிகுந்த உடல் நலக்குறைவால்
ஐந்து மாதம் படுத்த படுக்கையாகி சாவின் விளிம்பிற்கே சென்று விட்டேன் அதற்கு காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானது தான் இப்போது நான்
உங்களுக்கு ஒரு முன் உதாரணமாக நான் இருக்கிறேன்




என மாணவர்கள் மத்தியில் அவர் பட்ட அவஸ்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருக்கமாக பேசினார்